வனிதாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டாங்கபா.! அப்படி என்ன நடந்துச்சு பாருங்க.!

0
3045
Vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : கமல் போட்ட விளக்கப்படம்.! இந்த விதியை தான் கவின் மற்றும் லாஸ்லியா மீறினார்களா.! 

- Advertisement -

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ வில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் எதனால் குறைந்தது என்று போட்டியாளர்களுக்கு கமல் ஒரு விளக்கப்படம் போட்டு காண்பித்துக் கொண்டிருந்தார். அதில் கவின் மற்றும் லாஸ்லியா இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது மைக்கை அனைத்து பேசியதால்தான் என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ரோபோவில் வனிதாவிடம் கஸ்தூரி வாத்து என்று சொன்னதற்கு எதற்கு அவ்வளவு கோபப்படுவீர்கள் என்று விசாரிக்கிறார் கமல். ஆனால், வழக்கம்போல நான் கோபப்படவே இல்லை என்று தனது வாதத்தில் பிடிவாதம் பிடிக்கிறார் வனிதா. மேலும் ரசிகர்களை பார்த்து மிகவும் பயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் வனிதாவை பேசவிடாமல் ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement