‘இத மட்டும் தான் அவர் கிட்ட சொன்னேன், அது அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது’ – விஜய் 66 இப்படி ஒரு கதை தான். மனம் திறந்த இயக்குனர்.

0
501
Thalapathy66
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடுதாகவும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
BLOCKBUSTER LOADING: Vijay teams up with director Vamshi Paidipally for  Thalapathy 66; Details Inside | PINKVILLA

இந்த நிலையில் விஜய் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் சில தகவல்கள் கசிந்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து ‘விஜய் 66’ படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க இருக்கிறார் . இவர் தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன் – காதலி என்ன செய்தார் பாருங்க. வைரல் புகைப்படம்.

- Advertisement -

இந்த படத்தில் விஜயின் ஜோடியாக பாலிவுட்டில் நடிகை கியாரா அத்வானி நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அது உண்மை இல்லை என்று அறிவித்திருந்தார்கள். தற்போது விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ்- விஜய் கூட்டணியில் பைரவா, சர்க்கார் படங்கள் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் இணைவார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் வம்சி அவர்கள் சமீபத்தில் விஜய் 66 படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது,

விஜய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதர். முதலில் அவரிடம் இந்த படம் குறித்து சின்ன ஐடியா தான் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. மனித உறவுகளின் மகத்துவம், ஏமோஷனல் எல்லாம் என்னுடைய படங்களில் நிச்சயம் இருக்கும். விஜய் 66 படத்திலும் அதை எதிர்பார்க்கலாம். ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் ஸ்கிரிப்ட் வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement