நேர்கொண்ட பார்வையில் தல சொன்னதை பல ஆண்டுக்கு முன்னரே சொன்ன தளபதி.! எந்த படத்தில்னு பாருங்க.!

0
5909
vijay-ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தரமான படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறப்பான கருத்து கொண்ட படமாக இந்த படம் கொண்டாடபட்டு வருகிறது.

மேலும், இந்த படத்தில் ‘நோ மீன்ஸ் நோ’ அதாவது ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றால் அவளை நெருங்க கூடாது என்ற ஒரு அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் இதே போன்ற கருத்தை உடைய வசனங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் பேசியுள்ளனர்.

இதையும் பாருங்க : வெளியானது இந்த வார நாமினியின் லிஸ்ட்.! இந்த வாரம் இவர்கள் தான்.! 

இதே போல கருத்தை, ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றால் அவள் விலை மாதுவாக இருந்தாலும் தொடக்கூடாது என்று சிவாஜி கணேசனும், கட்டின மனைவியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னால் கிடட கூட நெருங்க கூடாது என்று மன்னம் படத்தில் ரஜினியும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நம்ம தளபதியும் இதே போன்ற கருத்தினை ‘பிரியமானவலே’ படத்தில் பேசியுள்ளார். அந்த படத்தின் ஒரு காட்சியில் ‘விருப்பம் இல்லாமல் விபச்சாரியாக இருந்தாலும் தொடக்கூடாது என்பது தான் என் பாலிசி’ என்று தளபதி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.