சூர்யாவின் பாராட்டு, ஜெய் பீம் பார்த்துவிட்டு விஜய் கூறியுள்ள விஷயம். ஷூட்டிங் ஸ்பாட் மீட்டிங்கில் நடந்த சுவாரசியம்.

0
224
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் விஜய், சூர்யா. தற்போது இவர்கள் இருவரும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிளைமாக்ஸ் ஜார்ஜியாவில் முடிந்து தற்போது சென்னையில் நடைபெற்று இருப்பதாகவும், ஷாப்பிங் மாலில் சில காட்சிகள் எடுக்கப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே போல் சன் ஸ்டுடியோவில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க : கேப்டன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இந்த நடிகர் யார் தெரியுதா ? விஜய்க்கு இவர ரொம்ப புடிக்கும்

- Advertisement -

அதே போல பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய்– சூர்யா இருவரும் சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-105.jpg

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது குறித்து பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் சூர்யா. அதே போல விஜய்யும், சூர்யாவின் ஜெய் பீம் படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாகவும் சூர்யாவை பாராட்டியுள்ளார் விஜய். ஏற்கனவே, விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்ற ஸ்டூடியோவின் பக்கத்து செட்டில் ‘சர்தார்’ படத்தின் ஷூடிங்கில் இருந்த கார்த்தி, விஜய்யை சர்தார் கெட்டப்பிலேயே நேரில் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement