மெட்ரோ ரயில் முதல் சாலையோரம் வரை, கண்ட இடங்களில் எல்லாம் டான்ஸ் போடும் லட்சுமி மேனன் – வைரலாகும் வீடியோ.

0
272
lakshmiMenon
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

இதையும் பாருங்க : சூர்யாவின் பாராட்டு, ஜெய் பீம் பார்த்துவிட்டு விஜய் கூறியுள்ள விஷயம். ஷூட்டிங் ஸ்பாட் மீட்டிங்கில் நடந்த சுவாரசியம்.

- Advertisement -

படிப்பை தொடர்ந்ததோடு நடனத்திலும் ஆர்வம் காட்டி வந்தார் லட்சுமி மேனன். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அதற்கு காரணம் சொன்ன லட்சுமி மேனன், நடனத்தில் கவனம் செலுத்தியதால் உடல் எடை குறைந்தது என்று கூறி இருந்தார்.

மேலும், விரைவில் இவர் தமிழில் ரீ – என்ட்ரி ஆகவும் இருக்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக லட்சுமி மேனன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் மெட்ரோ ரயில், சாலையோரம் என்று கண்ட இடங்களில் எல்லாம் ஆட்டம் போட்டு அதை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ‘இப்படி ஆடி ஆடி தான் உடம்ப கொறச்சீங்களா’ என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement