-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்தாரா? முழு விமர்சனம் இதோ

0
97

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விஜய் ஆண்டனி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ரோமியோ. இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மிர்னாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் விஜய் ஆண்டனி மலேசியாவில் வேலை பார்த்து இருக்கிறார். பின் அவர் விடுமுறையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது விஜய் ஆண்டனி வருவதை அறிந்து அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் சினிமாவில் எப்படியாவது பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மிர்னாலினி. பின் இரு வீட்டார் சம்மதத்துடன் ஒரு வழியாக விஜய் ஆண்டனி, மிருணாலினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த திருமணத்தில் மிர்னாலினிக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. இந்த விஷயம் விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு அவர் என்ன செய்தார்? தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் விஜய் ஆண்டனி தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் பட்டைய கிளப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து கதாநாயகியாக வரும் மிர்னாலினி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முழு கதையுமே அவரைச் சுற்றி நகைகிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் குறை எதுவும் இல்லாத அளவிற்கு நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கதைக்களம் அருமையாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு படத்தின் நீளத்தை இயக்குனர் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அது மட்டும் இல்லாமல் சில பாடல்கள் செட்டாகவே இல்லை. இது ஒரு மைனஸ் ஆகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளும் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ரோமியோ படம் சுமாராக இருக்கிறது.

நிறை :

விஜய் ஆண்டனி, மிர்னாலினி நடிப்பு சிறப்பு

கதைகளம் அருமையாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

ஃப்ரீ கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

குறை:

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

சில பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

சில இடங்கள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இறுதி அலசல்:

மொத்தத்தில் ரோமியோ – ரசிகர்களை கவர்ந்து விட்டான்

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news