தன்னுடைய மகளின் பிரிவு குறித்து எமோஷனலாக விஜய் ஆண்டனியின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பின் இவர் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
ரத்தம் படம்:
பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ரத்தம். இந்த படத்தை அமுதன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள்:
இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், தற்போது இவர் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பேரிழப்பு நடந்திருக்கிறது.
விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை:
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து இருக்கிறார். இவருக்கு 16 வயது தான். இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இருந்தார். இவர் சில மாதங்களுக்கு முன் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மகளின் இறப்பினால் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் மனைவி பாத்திமா மனம் உடைந்து போய் விட்டார்கள்.
MeeraThangam ur piano waits and longs for ur touch,as we r all still in disbelief,ur gone too soon baby,May be this world is not for you,but Amma is yet here,can’t understand the concept between life and death I’ve blanked outUntil I meet u eat well and stay happy,laara misses😭 pic.twitter.com/Uif0x8lNQC
— Fatima Meera Vijay Antony (@mrsvijayantony) December 10, 2023
பாத்திமா பதிவு:
தற்போது அதிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டும் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கிறார். இந்த சூழ்நிலையில் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தன்னுடைய உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மீரா தங்கம், உனது பியானோ நீ தொடுவாய் என நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. நீ எங்களை விட்டு மிக விரைவாக சென்று விட்டாய். ஒருவேளை இந்த உலகம் உனக்கானது அல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் அம்மா இங்கு தான் இன்னும் இருக்கின்றேன், இறப்பிற்கும் வாழ்க்கைக்கு இடையிலான இந்த போராட்டத்தை குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வாழ்க்கை எனக்கு இருள் சூழ்ந்து விட்டது, உன்னை சந்திக்கும் வரை நன்றாக உணவினை உண்டு மகிழ்ச்சியாக இரு நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கண்ணீருடன் கூறி இருக்கிறார்.