விஜய் வாங்கிய புது சொகுசு காரின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே விஜயின் புது கார் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் இடம் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அதில் இவரிடம் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். இதை கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து விஜய் இறக்குமதி செய்திருந்தார். இந்த காரை வாங்கியதில் இருந்து பல ப்ரச்சனை. இதனால் சமீபத்தில் தான் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை செகனண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு விட்டார் விஜய். ஆனால், இந்த காரை விஜய் எதற்காக விற்றார்? என்ற விபரம் தான் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தற்போது Lexus LM 350H என்ற மாடல் புது காரை தான் வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் வீட்டில் இருந்து இந்த புது கார் வெளியே வந்திருக்கும் வீடியோ கடந்த சில தினங்களாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனால் இந்த காரை பற்றி பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் விஜயின் புது கார் குறித்த விவரத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
விஜய் வாங்கிய புது கார்:
விஜய் வாங்கியிருக்கும் இந்த புதிய கார் கடந்த மார்ச் மாதம் தான் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இவர் ஏற்கனவே முன் பதிவு செய்து வைத்து சந்தைக்கு வந்த உடனே டெலிவரி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சொகுசு கார்களான ஆடி, பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு போட்டியாக Lexus LM 350H என்ற மாடல் சொகுசு கார் இருக்கிறது. இதற்கும், ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 4 இருக்கைகள், 7 இருக்கைகள் என்று இரண்டு வேரியன்ட்களில் இந்த கார் இருக்கிறது. இதில் விஜய் அவர்கள் 4 இருக்கைகள் வேரியண்ட் காரை வாங்கி இருக்கிறார். இதில் 48 inch அளவுக்கு பெரிய டிவி, 23 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் வசதியும் இருக்கிறது.

Lexus LM 350H கார் :
ஓட்டுநர் இருக்கைக்கும், பின்னிருக்கைக்கும் இடையே தடுப்பு போல் இருப்பதால் பின்னால் என்ன நடக்கிறது என்பதை கூட ஓட்டுனருக்கு தெரியாது. மேலும், மடக்கி வைத்துக் கொள்ள ஃபோல்ட் அவுட் பேஜ்களும் இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜஸ், ரீடிங் லைட் ஸ்டார் என ஹோட்டலில் இருப்பது போல எல்லா வசதிகளும் காருக்குள்ளே இருக்கிறது. இன்னும் முக்கியமாக இந்த காருக்குள்ளே தண்ணீர், குளிர்பானம் வைத்துக்கொள்ள குட்டியாக இருக்கைக்கு அருகில் பிரிட்ஜ் இருப்பது ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது. ஏசி கண்ட்ரோல், சீட் கண்ட்ரோல், ஆடியோ கண்ட்ரோல் என எல்லாவற்றையும் ஒரே டச்சில் மாற்றிக் கொள்ளலாம்.
காரின் சிறப்பு அம்சங்கள் :
இந்த காரின் முக்கியமான விஷயமே இருக்கைகள் தான். இலவம் பஞ்சு மெத்தை போன்று மெதுமெதுவென்று இருக்கிறது. இந்த இருக்கையில் படுத்து கொண்டே பயணிக்கலாம். அட்ஜஸ்ட் செய்தால் போதும் பெட்ரூமுக்கு போட்டியாக காரை மாற்றிக் கொள்ளலாம். இதில் பெட்ரோல் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பெட்ரோல் இல்லாமல் எலக்ட்ரிக் மூலமாக காரை இயக்கலாம் என்ற சிறப்பு அம்சம் இருக்கிறது. மிகவும் பாதுகாப்பு அம்சமாக காரை சுற்றி 360 டிகிரி கேமரா சிஸ்டம் இருக்கிறது. மேலும், விஜய் பல சொகுசு கார்களை வைத்திருந்தும் இந்த Lexus காரை வாங்கியதற்கு காரணம், அரசியலில் ரீ என்ட்ரி தான் என்று கூறப்படுகிறது.
விஜய் வீட்டில் எண்ட்ரீ கொடுத்த கார்.! விமானமே தோற்கும் ULTRA சொகுசு.! படுத்துக் கொண்டே பயணிக்கலாமாம்.!#Vijay #ThalapathyVijay #VijayCar #Lexus #LexusCar #NewsTamil24x7 pic.twitter.com/5jKjHKf15m
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) August 14, 2024
புது கார் வாங்க காரணம் :
அரசியல் தீவிரமாக ஈடுபடுவதால் அடிக்கடி அரசியல் ரீதியாக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டு தான் மார்க்கெட்டுக்கு வந்த புதிய கரை தேடி பிடித்து விஜய் வாங்கி இருக்கிறார். காரில் பின் இருக்கையில் அமர்ந்து என்ன பேசினாலும் முன்னாள் இருப்பவர்களுக்கு தெரியாது என்பதால் முக்கியமான சந்திப்புகளையும் காரிலே நடத்திக் கொள்ளலாம் என்பதாலும், ஒவ்வொரு முறையும் பொதுவெளியில் ரசிகர்களிடம் சிக்கி காரில் ஏறுவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது. அந்த அசம்பாவிதத்தை தவிர்க்கவும் இந்த கார் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காரை விஜய் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.