தளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா !

0
1538
vijay

தளபதி விஜய் இன்று ஒரு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் ரசிகர்களை வைத்திருப்பவர்களில் ரஜினிக்கு பிறகு ஒரு தமிழ் ஸ்டார் என்றால் அது விஜய் தான்.
vijay2000த்தின் துவக்கத்தில் கில்லி, திருமலை, திருப்பாச்சி, சிவகாசி என பட்டையை கிளப்பி மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டிருந்தார். பின்னர் 5,6 வருடங்களாக அரைத்த மாவையே அரைத்த விஜய்க்கு, வில்லு, சுறா, வேட்டைக்காரன், குருவி என தோல்விப்படங்கள் தான் மிச்சம்.

4 வருடங்களாக மார்க்கெட் சரிவை சந்தித்த விஜய்க்கு, காவலன் சற்று ஆருதல் அளித்தது. இருந்தும் பெரிதாக பண்ண நினைத்த விஜய், முருகதாசுடன் கை கோர்த்தார். கைகோர்த்ததால், கை கொடுத்தது ‘துப்பாக்கி’ என்னும் ஜாக்பாட். அடித்ததில் தூக்கிய விஜய் தனது முதல் 100 கோடி படத்தை கொடுத்தார்.
vijayபின்னர் மெதுவாக கத்தியில் அதே மார்க்கெட்டை மெய்டெய்ன் செய்தார். புலி., தலைவா என அடுத்தடுத்த படங்கள் சுமாராக போக, தற்போது தெறியில் வைத்து தெறிக்கவிட்டு மெர்சலில் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் சாதனை நாயகன் தளபதி.

அவரது முதல் 200 கோடி படத்தையும் கொடுத்து சாதித்து விட்டார்.ஆனால், ஒரு கட்டடத்தில் என்ன செய்வதென்று தவித்த விஜய்க்கு கை கொடுத்தது துப்பாக்கி தான். அந்த துப்பாக்கி 5 வருடம் முன்பு இதேன் நாளில் (நவ்.13) தான் வெளியாகி திருப்புமுனையை ஏற்ப்படுத்தியது.
Actor Vijayஇதனைத் தான் தற்போது ரசிகர்கள் மெர்சலுடன் சேர்த்து விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.