GOAT படத்தில் AI மூலம் கேப்டன், நேரில் பார்க்க அனுமதி விஜய் – வெங்கட் பிரபுவிடம் பிரேமலதா சொல்லி அனுப்பிய விஷயம். இதோ வீடியோ.

0
178
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

- Advertisement -

அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும், விஜய் விஞ்ஞானியாக இருப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் AI தொழில் நட்பம் மூலாம் விஜயகாந்த்தை கொண்டு வர இருக்கின்றனர்.

இதுகுறித்து பிரேமலதா அளித்த பேட்டியில் ‘கேப்டனை AI தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு எங்கள் வீட்டிற்கு ஒரு ஐந்து, ஆறு முறை வந்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முக பாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார. இது தொடர்பாக என்னை நேரில் சந்தித்து அவர் பேசிய போது ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கேப்டனை ஒரு காட்சியில் நாங்கள் GOAT படத்தில் கொண்டுவர இருக்கிறோம் அதற்கு உங்களின் அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் விஜயும் இது தொடர்பாக தேர்தலுக்கு பின்னர் என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். கேப்டன் இல்லாத இந்த சமயத்தில் அவருடைய இடத்தில் இருந்து தான் நான் இந்த விஷயம் குறித்து யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? கேப்டன் நடித்த செந்தூரப்பாண்டி என்ற படத்தில் தான் கேப்டன் விஜயயை அறிமுகம் செய்து வைத்தார் என்பது உலகிற்கே தெரியும்.

அதேபோல விஜயன் தந்தை எஸ் ஏ சி மீதும் விஜய் மீதும் கேப்டனுக்கு எப்போதும் ஒரு மிகப்பெரிய பாசம் உண்டு. அவருக்காக எத்தனையோ இயக்குனர்கள்காத்திருந்த போதிலும் கேப்டனை வைத்து 17 படங்கள் இயக்கி இருந்தார். அதனால் எப்போதும் எஸ் ஏ சி மீது கேப்டனுக்கு மரியாதை உண்டு. எனவே இந்த படத்தில் கேப்டனை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டு வருவது குறித்து எங்களிடம் கேட்டபோது. கேப்டன் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருந்திருக்க மாட்டார்.

எனவே விஜய் வந்து என்னை சந்திக்கும் போது நல்ல முடிவை கூறுகிறேன் என்று வெங்கட் பிரபுவிடம் சொல்லி இருக்கிறேன். மேலும், வெங்கட் பிரபுவியும் எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும்.எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து இளையராஜா குடும்பத்துடன் நான் பழகி இருக்கிறேன். எனவே விஜய்க்கும் உனக்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறேன் என்று பிரேமலதா கூறி இருக்கிறார்.

Advertisement