6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டியா..? பிரபல நடிகரை கிண்டல் செய்த சதிஷ், வெங்கட் பிரபு..!

0
370
Sathish

பிரபல இளம் நடிகரான வைபவ் தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் ஓரளவு தெரியும்படி பரிச்சயமானார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒரு புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் வைபவ் . பெயரிடபடாத இந்த புதிய படத்தில் காமெடி நடிகர் சதீசும் நடித்துள்ளார். இந்த படத்தின் துவக்க பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் காமெடி நடிகர் சதிஷ்.

அதற்கு பதிலளித்த வைபவ் 6 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். சதீஷின் இந்த டிவீட்டிற்கு பதிலளித்த இயக்குனர் வெங்கட் பிரபு என்னது 6 மணிக்கு மேல ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட நடிக்கமாட்டியா என்று கவுண்டமணி பாணியில் பதில் அளித்தார்.

-விளம்பரம்-

வெங்கட் பிரபுவின் இந்த பதிவிற்கு பதிலளித்த சதிஷ் , என்னால் நம்ப முடியவில்லை ப்ரோ 6 மணிக்கு முன்னாடி மட்டும் அப்படியே சிறப்பாக நடித்து விடுவாரா என்று தனது நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். நடிகர் வைபவ் மற்றும் சதிஷ் ஏற்கனவே சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement