விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா காதல் – கொளுத்திப்போட்ட உடன் நடித்த நடிகை.

0
263
- Advertisement -

விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிக்கிறார்கள் என்று அனன்யா பாண்டே கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். ஆனால், இவர் அதற்கு முன்னே தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இருந்தும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது.

- Advertisement -

விஜய் தேவர்கொண்டா திரைப்பயணம்:

கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் ‘liger’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இவரே தயாரித்தும் வருகிறார். மேலும், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லிகர் படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்குகிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

லைகர் படம் குறித்த தகவல்:

இந்த படமானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

-விளம்பரம்-

ராஷ்மிகா குறித்து அனன்யா பாண்டே சொன்னது:

தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் விஜய் தேவர்கொண்டா ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருமே பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தனர். விஜய் தேவர் கொண்டா குறித்து அனன்யா பாண்டேவிடம் கேட்டதற்கு அவர், ராஸ்மிகா மந்தனாவை அவர் காதலிப்பது போன்று மறைமுகமாக பதில் கொடுத்தார்.

விஜய் தேவர்கொண்டா சொன்னது:

அதற்கு விஜய் தேவர்கொண்டா, நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? எனக் கேட்க, அதற்கு அவர் ஆம் என்றார். மேலும், இது குறித்து விஜய் தேவர்கொண்டா கூறும்போது, ராஸ்மிகா என்னுடைய நல்ல நண்பர். அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அவர் என்னுடைய டார்லிங், அவரை நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவர்கொண்டா காதல் வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது அனன்யா பாண்டே கொளுத்திப் போட்ட செய்தியும் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement