முதல் நாளே நெகடிவ் விமர்சங்களை குவிக்கும் ‘லைகர்’ – விஜய் தேவர்கொண்டாவின் பழைய 200 கோடி டீவீட்டை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
544
liger
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லைகர் படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் விஜய் தேவர்கொண்டாவும், அனன்யா பாண்டேவும் பிஸியாக ஈடுபட்டுவந்தனர். அந்த வகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த லைகர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவர்கொண்டா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், டாக்ஸிவாலா படம் வெளிவந்த போது என்னால் உங்களிடம் எளிதாக பேச முடிந்தது.

பிரஸ் மீட்டில் விஜய் தேவர்கொண்டா:

ஆனால், இப்போது அப்படி பேச முடியவில்லை என்று கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் விஜய் தேவர்கொண்டா உடனே அங்கிருந்த டேபிளின் மீது காலை வைத்து இப்போது ஃப்ரீயாக பேசுங்கள் என்று கூறினார். இப்படி இவர் நடந்து கொண்ட விதத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருந்தார்கள். சமீபகாலகவே அடிக்கடி பாலிவுட் திரையுலகில் Boycott பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்குமாறு பெரிய அளவில் பிரச்சாரம் நடந்தது.

-விளம்பரம்-

அமீர் கானுக்கு ஆதரவு :

அதற்கு காரணம், 2015ஆம் ஆண்டு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. இப்போது அதிக அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அமீர்கானுக்கு ஆதரவாக விஜய் தேவர்கொண்டா வெளிப்படையாக கருத்து ஒன்றில் கூறி இருந்தார். அதில் அவர், உங்களின் பாய்காட் பிரச்சாரம் அமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை.

Boycott லிஸ்டில் சேர்ந்த லைகர் :

படத்தில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதித்திருக்கிறது. ஒரு படத்தில் நடிகர், இயக்குனர் மற்றும் நடிகை தவிர பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200,300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது பலருக்கும் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தருகிறது என்று கூறி இருந்தார்.

யார் எங்களைத் தடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன் :

என்னிடம் எதுவுமே இல்லாதபோதும்கூட நான் பயந்தது இல்லை. அன்னையின் ஆசி இருக்கிறது. மக்களின் அன்பு இருக்கிறது. உதவிக்குக் கடவுள் இருக்கிறார். என்னுள்ளே நெருப்பு இருக்கிறது. யார் எங்களைத் தடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன். என்று கூறி இருந்தார். ஆனால், லைகர் திரைப்படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறி இருக்கிறது. மற்ற மொழிகளை விட தெலுங்கு ரசிகர்களே இந்த படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

விஜய் தேவர்கொண்டாவின் பழைய ட்வீட் :

மேலும், தமிழ் விமர்சகரான பிரசாந்த் கூட இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறது. ட்விட்டரில் பலரும் இந்த படத்தை கழுவி ஊற்றி வரும் நிலையில் விஜய் தேவர்கொண்டா இந்த படம் குறித்து பதிவிட்டு இருந்த பழைய ட்வீட் ஒன்றை பதிவிட்டு தற்போது கலாய்த்துவருகின்றனர். கடந்த வருடம் விஜய் தேவரகொண்டா டிவிட்டரில் லைகர் திரைப்படத்தை ரூ. 200 கோடி கொடுத்து பிரபல OTT நிறுவனம் வாங்க உள்ளது என்ற தகவலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படத்தை பதிவிட்டு விஜய் தேவரகொண்டா “மிகவும் குறைவு, நான் இதை விட அதிகமாக வசூல் செய்வேன்” என பதிவிட்டு இருந்தார்.

Advertisement