இத்தனை கோடி கொடுத்து படத்தை வாங்க முன் வந்த OTT நிறுவனம் – விஜய் தேவர்கொண்டாவின் ஓவர் காண்பிடண்ஸ் பதிவு.

0
1172
vijay
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது.

-விளம்பரம்-

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிடுகிறது. தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் இவர் தற்போது இவர் நடித்து வரும் ‘liger’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த படம் ஒரே நேரத்தில் இந்தியிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை OTTயில் வெளியிட 200 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்க Ott நிறுவனம் முன் வந்துள்ளது. ஆனால், அதை விஜய் தேவர்கொண்டா நிராகரித்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து பதிவிட்டுள்ள விஜய் தேவர்கொண்டா, இது மிகவும் சிறிய தொகை, தியேட்டரில் வெளியிட்டால் நான் இதை விட அதிகம் வசூலித்துவிடுவேன் என்று பதிவிட்டு இருந்தார்.

கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு படங்களும் நேரடியாக OTT யில் வெளியாகி வருகிறது. உச்ச நட்சத்திரங்கள் படங்கள் கூட OTT யில் தான் வெளியாகி வருகிறது. இந்த லாக் டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் தான் இருந்து வருகிறது. அப்படி இருக்க விஜய் தேவர்கொண்டா தனது படம் 200 கோடிக்கு மேல் வசூல் பெரும் என்று கூறி இருப்பதை பலரும் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், தற்போது திரையரங்குகள் திறந்தால் கூட 50 % இருக்கையுடன் தான் அனுமதி அளிக்கப்படும் என்பதும் நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று. அப்படி இருக்க விஜய் தேவர் கொண்டாவின் இந்த நினைப்பு நம்பிக்கை கிடையாது இது ஓவர் காண்பிடண்ஸ் என்று கேலி செய்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் வெளியான பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் படங்களே 30கோடி தான் வசூல் செய்தது தெலுங்கு படம் எப்படி 200 கோடி வசூல் செய்யும் என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement