வெற்றிமாறன்,லோகேஷ் தவிர மத்த இயக்குனர்கள் உங்க கண்ணுக்கு தெரியலையா – பத்திரிகையாளர் கேள்விக்கு VDK கொடுத்த Thug life பதில்.

0
1747
Vijaydevarkonda
- Advertisement -

தமிழ் சினிமா இயக்குனருடன் பணியாற்றுவது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விஜய் தேவர் கொண்டா கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக விஜய் தேவர்கொண்டா திகழ்கிறார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது.

- Advertisement -

விஜய் தேவர்கொண்டா திரைப்பயணம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘liger’. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருந்தார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

குஷி படம்:

இந்த படம் வெளியாகி மிக பெரிய அளவில் தோல்வி அடைந்து இருந்தது. இது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா, முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் கேள்வி:

இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தற்போது படத்திற்கான ப்ரமோசன் பணிகளில்படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றப்பட்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழு பதில் அளித்து இருக்கிறார்கள். அப்போது விஜய் தேவர் கொண்டாவிடம் எந்த தமிழ் இயக்குனருடன் நீங்கள் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்? அதற்கு விஜய தேவர் கொண்டா, வெற்றிமாறன்- பா. ரஞ்சித் ஆகியாருடன் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

விஜய தேவர் கொண்டா பதில்:

அதற்கு செய்தியாளர்கள், வெற்றிமாறன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் இவர்களை பற்றி மட்டும் தான் சொல்கிறீர்கள் ஏன் ? மற்ற இயக்குனர்கள் எல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா ? இவர்களெல்லாம் உச்சத்தில் இருப்பதால் சொல்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்கு பதில் அளித்த விஜய் தேவர்கொண்டா, எனக்கு மற்ற இயக்குனர்களை தெரியாது என்று நீங்கள் கேட்கிறீர்களா ? எனக்கு அருண் பிரபு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு அருண் பிரபுவை தெரியுமா? அவர் என்ன படம் எடுத்தார் சொல்லுங்கள் என்று கேட்டார். இதற்கு அந்த பத்திரிக்கையாளர் பதில் சொல்லாமல் இருக்க, அவர் தான் அருவி, வாழ் போன்ற படங்களை எடுத்தவர். எனக்கு ஸ்ரீ கார்த்திகை பிடிக்கும். அவரை உங்களுக்கு தெரியுமா ? தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் அற்புதமான படத்தை எடுத்தார். எனக்கு அருள் மாதேஸ்வரனை பிடிக்கும். அவர்தான் தற்போது கேப்டன் மில்லர் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement