1 கோடி நன்கொடையா, உங்க படத்தால நஷ்டமான 8 கோடிய குடுங்க – சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவர்கொண்டா

0
623
- Advertisement -

குஷி படத்தின் வெற்றியை அடுத்து ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்க இருப்பதாக விஜய் தேவர் கொண்ட அறிவிப்பு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக விஜய் தேவர்கொண்டா திகழ்கிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘liger’. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருந்தார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிக பெரிய அளவில் தோல்வி அடைந்து இருந்தது.

- Advertisement -

குஷி படம்:

இது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா, முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த சமந்தாவின் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் மூன்று நாட்களிலேயே உலக அளவில் 70 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷி படம் வெற்றி அடைந்ததை குறித்து விஜய் தேவர்கொண்டா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டா அறிக்கை:

அதாவது, குஷி படத்தின் வெற்றி கொண்டாடும் விதமாக 100 ஏழை குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து தல ஒரு லட்சம் வழங்க இருப்பதாக விஜய் தேவர் கொண்டா அறிவித்திருக்கிறார். தற்போது அதற்கான விண்ணப்ப படிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வேல்டு பேமஸ் லவ்வர் படத்தின் விநியோகம் செய்தவர் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீங்கள் நன்கொடையாக ஒரு கோடி வழங்கப்போவதை அறிவித்து இருக்கிறீர்கள்.

அபிஷேக் பிக்சர்ஸ் கோரிக்கை:

வேல்டு பேமஸ் லவ்வர் படத்தின் மூலம் நாங்கள் எட்டு கோடி ரூபாய் இழந்தோம். எங்களுடைய குடும்பங்களையும் நீங்கள் காப்பீர்கள் என நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் படத்தின் விநியோகம் செய்த அபிஷேக் பிக்சர்ஸ் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement