எப்படி இருக்கிறது ஜனநாதன் விட்டு சென்ற கடைசி படம் ‘லாபம் ‘ – முழு விமர்சனம் இதோ.

0
3703
laabam
- Advertisement -

பேராண்மை, புறம்போக்கு போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு பிடித்த வகையில் படங்களாக கொடுப்பதில் வல்லமை வந்தவர் எஸ்பி ஜனநாதன். இவர் இவ்வுலகை விட்டுப் போனாலும் இவருடைய படங்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது மறைந்த எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லாபம்’. இதில் சுருதிகாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகி உள்ளது. இந்த படத்தை குறித்து ரசிகர்களின் கருத்தை வாங்க போய் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

லாபம் படத்தில் பக்கிரி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறி பல நாடுகள் சுற்றி திரிந்து பின் தனது சொந்த ஊர் பெருவயல் கிராமத்திற்கு திரும்பி வருகிறார். பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து மக்களை அடிமையாக்கி வைத்திருக்கிறார் வில்லன் ஜெகபதி பாபு. பல வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு வரும் விஜய் சேதுபதி, ஜெகபதிபாபுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்.

கிராம மக்களை ஒன்று திரட்டி பண்ணை திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இவரின் செயலால் கோபம் அடைந்த ஜெகபதி பாபு மக்களுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார். மேலும், நாடக கலைஞர்கள் மூலம் விஜய் சேதுபதி மக்களிடம் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தின் லாபத்தையும் சொல்ல நினைக்கிறார். நாடகக்கலைஞர்களில் ஒருவராக கிளாரா என்ற கதாபாத்திரத்தில் சுருதிகாசன் என்ட்ரி கொடுக்கிறார். பின் மக்களின் நம்பிக்கையும் ,விவசாயத்தின் நன்மையும் கொண்டு பல வகையில் ஜெகபதிபாபுவை எதிர்த்து விஜய் சேதுபதி போராடுகிறார்.

-விளம்பரம்-

இறுதியில் ஜெகபதிபாபுவை விஜய் சேதுபதி அழித்தாரா? விஜய் சேதுபதி பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு வர காரணம் என்ன? விவசாயத்திற்காக விஜய் சேதுபதி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாய சங்க தலைவராக அற்புதமாக நடித்திருப்பார். வழக்கம் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் நடித்து பூர்த்தி செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் நடிப்பு கொஞ்சம் சுமார்தான். விஜய் சேதுபதியை காதலிப்பது, அவருக்கு உதவுவது போன்ற காட்சிகள் இருந்தாலும் சொல்லிக்கிற அளவுக்கு பெரிதாக ஸ்ருதிகாசன் பங்கு ஒன்றும் இல்லை. மேலும், ஜெகபதி பாபு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி நண்பர்களாக கலையரசன், ரமேஷ் திலக் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியான முறையில் செய்துள்ளார்கள்.
பிளஸ்:

விலை நிலங்கள், விவசாயிகளின் நிலைமை, விவசாயிகள் கிடைக்கும் லாபம், விவசாயிகளின் லாபத்தை பிறர் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை இயக்குனர் அற்புதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

வழக்கம்போல் விஜய் சேதுபதியின் நடிப்பு வேற லெவல்.

மைனஸ்:

படத்தில் விவசாயிகள் நிலைமை, கார்ப்பரேட் அரசியல் போன்ற கான்செப்ட் புதுமையாக கொண்டு வந்தாலும் பழைய படங்களின் தாக்கம் ஒரு சில இடத்தில் வந்து சென்றுள்ளது.

டி இமான் இசை பெரிதும் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

கொரோனா தாக்கத்தினால் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது முதலில் திரையரங்கிற்கு வெளிவந்த படம் லாபம். பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை லாபம் பூர்த்தி செய்யவில்லை. மொத்தத்தில் லாபம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நஷ்டம்.

Advertisement