6 வயதில் பெற்றோரின் இரண்டாம் திருமணத்தை பார்த்த விஜய். எஸ் ஏ சி கொடுத்த ஷாக்.

0
100468
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய பெற்றோர்களின் திருமணத்தை நேரில் பார்த்து உள்ளார் என்றும், இது யாருக்குமே கிடைக்காத அதிசயமான நிகழ்வு என்றும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் தெரிவித்து உள்ளார். சினிமா துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவருடைய மகன் தான் நம்ப தளபதி விஜய். தந்தையைப் போலவே நம்ப தளபதி விஜய் அவர்கள் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

-விளம்பரம்-

மேலும், சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர்கள் எழுதிய புத்தகங்கள் குறித்த தகவல் அனைவருக்கும் தெரியும். அதோடு ஜெயம் ரவியின் பெற்றோர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும், அவருடைய மனைவி சோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்கள். மேலும், இவர்கள் இருவரும் அந்த புத்தகங்களை வெளியிட்டார்கள். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் பாருங்க : என் மகளின் ஆத்மா. என்கௌண்டர் குறித்து பேசிய பிரியங்காவின் தந்தை.

- Advertisement -

அதில் அவர் பேசியது, சினிமா மீது அதிக ஆசையும், ஆர்வமும் கொண்டதால் மதுரையில் இருந்து டிக்கெட் எடுக்காமல் ரயிலில் சென்னைக்கு வந்தேன். அப்போது திண்டுக்கல்லில் என்னிடம் டிக்கெட் இல்லாததால் டிக்கெட் பரிசோதகர் இறக்கி விட்டார். பின்னர் மீண்டும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தேன். மீண்டும் என்னை திருச்சியில் இறங்கி விட்டார்கள். எப்படியோ டிக்கெட் எடுக்காமல் கஷ்டப்பட்டு யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வந்தேன். பின் சினிமா துறையில் பல கஷ்டங்களை பட்டும், பல முயற்சிகள் செய்தும் இப்போது இயக்குனராக மாறி உள்ளேன். சென்னைக்கு நான் முதன் முதலாக வந்த போது எனக்கு தங்குவதற்கு வீடு கொடுத்தவர் மகள் தான் சோபா.

s a c and vijay க்கான பட முடிவு

-விளம்பரம்-

பின் நாங்கள் இருவரும் காதலித்தோம். அதற்குப் பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. என் மகன் விஜய்க்கு ஆறு வயதாக இருக்கும் போது எங்களுக்கு கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது முறையாக திருமணம் நடை பெற்றது. இந்த பாக்கியம் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்திருக்காது என்று பூரிப்புடன் கூறினார். ஆகவே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கிறிஸ்துவர், அவருடைய மனைவி சோபா இந்து. இந்நிலையில் முதலில் இவர்களுக்கு இந்து முறைப்படி தான் திருமணம் நடந்தது. சில வருடங்கள் கழித்து அதாவது விஜய்க்கு ஆறு வயது ஆகும் போது இவர்கள் இரண்டாவது முறையாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

Advertisement