பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்லாத மகன் பெயரில் அர்ச்சனை செய்த SAC – இது தாங்க பெத்த பாசம்ன்றது. வைரலாகும் வீடியோ.

0
423
vijay
- Advertisement -

கடந்த சில மதங்களாகவே விஜய் அவரது தந்தையுடன் பேசுவது இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேர்த்திலேயே நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்ததும் இல்லை என்றும், தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிவித்து இருந்தார்.விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் அவர் தந்தை மீது கடுப்பான விஜய் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிக் பாஸ் சீசன் 1ல் வந்த சம்பளத்தில் வாங்கிய முதல் வண்டி, 11 வருடமாக வாழ்ந்து வரும் வீடி. ஜூலி வெளியிட்ட Home Tour வீடியோ.

மன்னிப்பு கேட்டும் மனமிறங்காத விஜய் :

பல பேட்டிகளில் விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் பேசுமாறு கண்ணீர் விட்டு இருந்தார் எஸ் ஏ சி. அவ்வளவு ஏன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய எஸ் ஏ சி எந்த ஒரு தந்தையும் பெற்ற மகனின் வாழ்க்கையை கெடுக்கும் மாட்டார்கள், குறிப்பாக உன்னுடைய அப்பா அதை செய்ய மாட்டார், ஏனென்றால் நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்தேன், உனக்காகத்தான் வாழ்வேன். நான் செய்த தவறை மறந்து விட்டு என்னை நீ புரிந்து கொள்வாய்.

-விளம்பரம்-

அந்த மாய வலையிலிருந்து நீ வெளியில் வரவேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த சதியில் இருந்து வெளியில் வருவது மிகவும் கடினமாகிவிடும் இதை உன் தந்தையாக சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள். நான் செய்த அனைத்துமே உனக்கு தவறாக காட்டப்படுகிறது என்று ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ் ஏ சி தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள் :

ஆனால், அவருடைய மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் யாருமே இல்லை. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட வரமுடியதா என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். இப்படி ஒரு நிலையில் எஸ் ஏ சி மற்றும் ஷோபா இருவரும் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு செய்து விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்துள்ளனர்.

விமர்சங்களுக்கு பதிலடி :

விஜய் குடும்பம் கிறிஸ்துவ மதத்தை தான் பின்பற்றி வருவதால் விஜய் கிறிஸ்துவ மத மாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக பல முறை விமர்சங்கள் எழுந்து இருக்கிறது. இதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்த எஸ் ஏ சி ‘ நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா பெயர் சேனாதிபதி பிள்ளை. நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.நான் சோபாவை ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் நினைத்திருந்தால் அப்போதே எங்கள் கல்யாணத்தை சர்ச்சியில் பண்ணி இருக்கலாம். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை.

எம்மதமும் சம்மதம் :

இன்று வரை என் மனைவியின் பூஜை அறையில் அவருடைய சுதந்திரத்தை நான்கு தடுத்தது கிடையாது. அதே போல் நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை மதம் மாற்றி திருமணம் செய்ததாக கூறுகிறார்கள். நீங்கள் வேண்டும் என்றால் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு சான்றிதழ் இருக்கு. அதை பார்த்தால் உங்களுக்கு தெரியும். விஜய், சங்கீதாவுக்கு தாலி கட்டி இந்து முறைப்படி தான் திருமணம் நடந்தது. கிறிஸ்துவ முறையில் என்று சொல்வது எல்லாம் பொய். நான் சொன்னதற்கு ஆதாரம் தருகிறேன். அவர்கள் சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement