பிக் பாஸ் சீசன் 1ல் வந்த சம்பளத்தில் வாங்கிய முதல் வண்டி, 11 வருடமாக வாழ்ந்து வரும் வீடி. ஜூலி வெளியிட்ட Home Tour வீடியோ.

0
832
julie
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் தற்போது பிரபலமாகி இருக்கிறார்கள். மேலும், பிக்பாஸ் முதல் சீசன் தமிழ் சின்னத்திரையில் பெரிய எதிர்பார்ப்பு கிடையில் நடந்தது. அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கும் நிறைய பிரச்சினைகள் எல்லாம் இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. இதுவரை ஐந்து சீசன் முடிந்து விட்டது. ஆனால், முதல் சீசனை போல் பெரிய அளவில் ஹிட்டடித்த சீசன் எதுவுமே இல்லை என்று தான் சொல்லணும். அந்த வகையில் முதல் சீசனில் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லாமல் கலந்துகொண்டவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘என் வாழ்க்கைக் கனவு நடந்தேறிய நாள்’ – 14 ஆண்டுகள் நிறைவு செய்த சுப்ரமணியபுரம் குறித்து ஜேமஸ் வசந்தன் போட்ட பதிவு.

ஜூலி பற்றிய தகவல்:

ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார். அதற்கு காரணம் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தது தான். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

-விளம்பரம்-

செவிலியர் தொழிலை விட்ட ஜூலி :

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.இருந்தாலும் ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள்.ஆனால், ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசியிருந்தார். இதிலிருந்து மீண்டு வர இவர் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்டால் மாறிய பெயர் :

பின் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தன்னுடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து இருக்கிறார். பிக் பாஸ் அல்டிமேட் மூலம் ஜூலி தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார்.இந்த நிகழ்ச்சியில் ஜூலி வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். மேலும், ஜூலி போட்டியில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரின் மனதில் வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஜூலியின் Home Tour வீடியோ :

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி ஒரு சில நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே கலந்துகொண்டார். அதே போல ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். அது போக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் சொந்தமாக யூடுயூ சேனல் ஒன்றயும் ஆரம்பித்தார். இப்படி ஒரு நிலையில் தனது யூடுயூப் பக்கத்தில் தனது Home Tour வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement