விஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.! லைக்ஸ் அல்லது.!

0
441
Sriman

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் விஜய். இவரை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது இணையத்தில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்க்கு சினிமாவிலும் பல நெருங்கிய நண்பர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஸ்ரீமனும் ஒருவர், இவர் விஜய் நடித்த லவ் டுடே தொடங்கி பைரவா வரை பல்வேறு படங்களில் விஜய்யின் நண்பராக நடித்துள்ளார். இவருக்கும் விஜய்க்கும் ஒரு நெருங்கிய நட்பும் உள்ளது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகை மந்திரா, கரண், தாமு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர். இந்த புகைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.