பல சோதனைகளை கடந்து +2 தேர்வில் சாதித்த மாணவிக்கு விஜய் விருது – யார் இந்த மாணவி தெரியுமா?

0
40
- Advertisement -

இரண்டாம் கட்டமாக நடக்கும் கல்வி விருது விழாவில் திருநங்கைக்கு விஜய் பரிசளித்து இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த சில வாரங்களாக விஜய்யின் கல்வி விருது விழா குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு விஜய் அவர்கள் பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி விருது விழா இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊக்கத்தொகையும் பரிசும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்சியின் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். முதற்கட்டமாக சுமார் 800 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

கல்வி விருது விழா:

இந்நிலையில் இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த 740 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தமாக 3500க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்கள்.

விழாவில் விஜய் சொன்னது:

அதோடு விழாவில் விஜய் அதிகமாக பேச மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் விழாவில் நீட் தேர்வு குறித்து பேசியிருந்தார். அதிலும் நீட் தேர்வை வைக்க வேண்டாம். எல்லா மாணவர்களுக்கும் எளிதாக மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது திருநங்கை நிவேதா அருகில் தான் அமர்ந்திருந்தார். 2024 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை தான் நிவேதா.

-விளம்பரம்-

திருநங்கை நிவேதா:

அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், இவர் நீட் தேர்வையும் எழுதி இருக்கிறார். மருத்துவர் ஆகுவது தான் இவருடைய கனவு. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் லேடி லெவிங்ஸ்டன் அரசு மாதிரி பள்ளியில் தான் படித்தார். பல பிரச்சனைகளை கடந்து இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். இதில் அவர் 280 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். மேலும், தேர்வில் வெற்றி பெற்றது குறித்து திருநங்கை நிவேதா செய்தியாளர்கள் சந்திப்பில், பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்து தான் நான் இந்த தேர்வை எழுதி இருக்கிறேன்.

நிவேதா அளித்த பேட்டி:

இரண்டு திருநங்கைகள் எனக்காக கல்வி அதிகாரிகளிடம் பேசி, தலைமையாசிரியரிடம் சீட் வாங்கிக் கொடுத்தார்கள். மூன்று ஆண்டுகளாகத் தான் நான் இந்த பள்ளியில் படிக்கிறேன். நீட் தேர்வையும் எழுதி இருக்கிறேன். மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வது தான் என்னுடைய கனவு. மேலும், நான் பள்ளியில் படித்த போது மற்ற மாணவர்கள் என்னை திருநங்கையாக நினைக்கவில்லை. அவர்களுள் ஒருவராக தான் என்னை பார்த்தார்கள். அதே போல் பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எல்லோரும் எனக்கு உதவி இருந்தார்கள். இதனால் தான் என்னால் வெற்றி பெறவும் முடிந்தது என்று கூறியிருக்கிறார். இன்று விழாவில் திருநங்கை நிவேதாவுக்கு விஜய் கையால் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisement