கட்சி பெயரை அறிவித்ததுமே ஆரம்பித்த Trollகள் – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள் இதோ.

0
532
- Advertisement -

விஜய் அரசியல் குறித்து நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நெட்டிசன்கள் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதில் சில விஜய் ரசிகர்கள், எங்களுடைய மனைவி, குழந்தைகளுடன் எதிர்காலத்தில் விஜயின் படங்களுக்கு செல்லலாம் என்ற திட்டமிட்டு இருந்தோம். தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் அவர்களுடைய கனவுகள் எல்லாம் தவிடு பொடியாகி உள்ளது. விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறயிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றால் மீண்டும் நடிக்க வந்து விடுவார். அதோடுவிஜய் சினிமாவில் இருந்து விலகி விட்டால் இனி அஜித் ராஜ்யம் தான். அன்று எம்ஜிஆர், இன்று தளபதி விஜய் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

கட்சியின் பெயர்:

பின் இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் அவர்கள் இன்று மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தேர்தல் குறித்து விஜய் சொன்னது:

அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. மேலும், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். பின் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகிறது. தற்போது நடித்துவரும் கோட் படத்தை தவிர வேறு எந்த படத்திலும் விஜய் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெட்டிசன்கள் மீம்ஸ்:

Advertisement