கட்டிப்புடி கட்டிப்புடி செட்டில் நடந்துள்ள போட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட்டின் போதே லிப் லாக் காட்சியை எடுத்துள்ள எஸ் ஜே சூர்யா.

0
4181
Kushi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருந்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் இவர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். ‘

- Advertisement -

இந்த திரைப்படம் வெளியாகி நேற்றோடு 23 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் #21YearsOfEvergreenKushi என்ற ஹேஷ் டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போது நடந்த ஸ்வாரசியான விஷயத்தை பற்றி பார்க்கலாம். குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் எஸ்.ஜே. சூர்யா. பின் அவர் பத்திரிக்கைகளை சந்திக்கும் ஏற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

மேலும், அதில் அவர் குஷி படத்தின் கதையை டாப் to பாட்டம் வரை அழகாக அவர்களிடம் கூறி விட்டார். மேலும், இந்த படத்தை எழுதி,நானே இயக்கி உள்ளேன் என்று அறிவித்திருந்தார். மேலும், இந்தத் திரைக் கதைக்கு சமமாக யாராலும் கொடுக்க முடியாது என்று ஓப்பன் சேலஞ்ச் அளித்து இருந்தார். ஆனால், என்ன ஒரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அப்போது எந்த ஒரு சமூக வலைத்தளங்களும் இல்லை.

-விளம்பரம்-

இருந்திருந்தால் படத்திற்கு முன்பே கதையை சொல்லிவிட்டதால் படத்தின் மீது எதிர்பரப்பு குறைந்து பிளாப் ஆகி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு முன்னரே இந்த படத்தை வேறு யாராவது கூட எடுத்திருந்தது இருப்பார்கள் என்பது தான் உண்மை. அதே போல இந்த படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகாவை அவரது தந்தை செல்வி சென்று தான் அழைப்பார். செல்வி என்பது எஸ் ஜி சூர்யாவின் அக்காவின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர் பாராத விதமாக விஜய் மற்றும் ஜோதிகாவின் லிப் லாக் காட்சி அமைந்து இருந்தது. ஆனால், படத்தின் டெஸ்ட் ஷூட்டின் போது கட்டிபுடி கட்டிப்புடிடா பாடலின் செட்டில் போட்டோ ஷூட் நடந்து இருக்கிறது. மேலும் டெஸ்ட் ஷூட்டின் போதே விஜய் – ஜோதிகா இருவரும் லிப் லாக் காட்சிக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement