அந்த படத்துக்கு முன்னாடி வரைக்கும் பயங்கர வெய்ட் தூக்குவேன் – அஜித்தை போல விஜய்க்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை.

0
819
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும், இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது. மற்ற ஹீரோக்களின் படங்கள் எப்படியோ ஆனால், தல, தளபதி படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி விடும் அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் கோடிகளை கடந்து விடும். இதற்காகவே விஜய், அஜித்தின் படங்கள் என்றாலே விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கலும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விடுவார்கள்.

-விளம்பரம்-
vijay-ajith

விஜய் மற்றும் அஜித் இருவரும் கிட்டதட்ட ஒரே வயது உடையவர்கள் தான். ஆரம்ப காலத்தில் விஜய்யை விட அஜித்துக்கு தான் பெண்கள் ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவின் ஆணழகனாக போற்றப்பட்டு வருபவர் அஜித். ஹீரோக்கள் என்றாலே உடல் அமைப்பில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அஜித்துக்கு முதுகில் செய்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கடுமையான உடற்பயிற்சிகளை அஜித் செய்வதை நிறுத்திவிட்டார்.

- Advertisement -

ஆனால், விஜய் தற்போது ஒரு கல்லூரி மாணவன் போல தனது உடலை படு பிட்டாக வைத்து வருகிறார். அதற்கு காரணம் அவர் தற்போதும் உடற்பயிற்சியை கைவிடாமல் இருந்து வருகிறார். ஆனால், அஜித்தை போல விஜய்க்கு முதுகில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவர்கள் கடுமையான உடற் பயிற்சியை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்துவிடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க வலிமை படத்தில் அஜித் கடுமையாகவும், தீவிரமாக உடற்பயிற்சியில்இறங்கி உள்ளார். மேலும், இந்த படத்தில் தல அஜீத் செம்ம மாஸாக இருக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக அவர் அதிக உடற்பயிற்சி எடுத்து பிட்னஸ் ஆக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும், அவருடைய இந்த புதிய பிட்னஸ் லுக்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement