வாடகை ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை – புஸ்ஸி ஆனந்திற்கு அடிக்கப்பட்ட விபூதி.

0
499
- Advertisement -

வாடகை ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி குஷி ஆனந்தையே ஏமாற்றி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியா முழுவதும் மழை பெய்ததால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது. மிக்ஸாம் புயல் சென்னையே புரட்டி இருந்தது. கடந்த மாதம் தான் அந்த நிலை மாறி மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அதிகமாக கனமழை பெய்திருந்தது. இதுவரை தமிழகம் காணாத வெள்ளத்தால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அவர்கள் நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கி இருந்தார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் கட்டளை போட்டு மக்களுக்கு முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உதவி செய்திருந்தார்கள். இந்த முறை நேரடியாக விஜய் களத்தில் இறங்கி நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார். மேலும், இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவர் சபின் என்பவர் நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார். தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனமும் ஒன்று வழங்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் சேவை:

அதில், ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த ஆம்புலன்ஸ் சேவையை தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்திருந்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டிருப்பதாக சோசியல் மீடியாவில் வீடியோக்களை எல்லாம் வைரல் ஆக்கப்பட்டது. விஜய் பாடல் பின்னணியில் ஆம்புலன்ஸ் பறக்கும் அலப்பறை காட்சிகள் எல்லாம் வெளியாகியிருந்தது. ஆனால், ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட இரண்டே நாளிலேயே மாயமாகிவிட்டது.

-விளம்பரம்-

நிர்வாகி செய்த வேலை:

இதனால் ஆம்புலன்ஸ் என்னானது? என்று பலருமே கேள்வி எழுப்பினார்கள். இறுதியில் அது கன்னியாகுமரியில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வந்தது என்று தெரிய வந்திருக்கிறது. மேலும், இது குறித்து விசாரிக்கையில், விஜய் மக்கள் நிர்வாகியான சபின் என்பவர் நடிகர் விஜய் உடைய கவனத்தை ஈர்க்கத்தான் காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரிடம் தனக்கு இரண்டு நாள் ஆம்புலன்ஸ் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு அதில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற ஸ்டிக்கர் எல்லாம் விளம்பரத்திற்காக ஒட்டி இலவச ஆம்புலன்ஸ் சேவை என்று பயன்படுத்தி இருக்கிறார்.

வாடகை ஆம்புலன்ஸ் குறித்த சர்ச்சை:

அது மட்டும் இல்லாது வாடகைக்கு எடுத்து வந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸை புஸ்ஸி ஆனந்தை வைத்தே தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் மற்ற நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அளித்திருக்கிறார்கள். இதை அடுத்து தமிழக வெற்றிக்கழகம் என்ன முடிவெடுக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement