அட, மீனாவின் அம்மாவும் சித்தியும் நடிகைகள் தானா – அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றய மீனா.

0
548
- Advertisement -

நடிகை மீனாவின் அம்மா, சித்தி பற்றி பலரும் அறிந்திராத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார். இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மீனா கணவர் இறப்பு:

மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் தான் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார். இதற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது தான் மீனா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கணவன் இழப்பில் இருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் அம்மா, சித்தி பற்றி பலரும் அறிந்திராத விஷயத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். மீனாவின் அம்மா பெயர் ராஜ் மல்லிகா. இவர் கேரளா கண்ணூரை சேர்ந்தவர்.

மீனாவின் சித்தி:

இருந்தாலும், இவர் சிறு வயதில் இருந்தே சென்னையில் தான் வளர்ந்தார். இவருடைய தங்கை தான் ராஜ் கோகிலா. அப்போது அவரை பலரும் கோகிலா என்று தான் அழைத்தார்கள். இவர் சிவாஜி, ஜெயலலிதா, ஜெமினி கணேசன் போன்ற பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின் கர்ணனின் கங்கா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கர்ணன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.

-விளம்பரம்-

மீனா அம்மா குறித்த தகவல்:

ஹாலிவுட் கௌபாய் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியதே இவர்தான். இவருடைய படத்தில் சண்டை காட்சிகளும், கவர்ச்சி காட்சிகளும் பயங்கரமாக இருக்கும். இவருடன் ராஜ்கோகிலா கவர்ச்சி மற்றும் சண்டை படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தின் சண்டை நடிகரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகினார். தங்கையுடன் படபிடிப்புக்கு சென்ற மல்லிகாவுக்கு கர்ணனின் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ராஜ் மல்லிகாவும் அதிகமான கவர்ச்சியான படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் இருந்து விலகல் :

இருந்தாலும், அவரால் அதிக வருடங்கள் சினிமாவில் நீடிக்க முடியவில்லை. பின் ஆந்திராவை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையிலிருந்து விலகினார். இவருடைய மகள் தான் மீனா. தன்னுடைய சித்தி, அம்மாவால் செய்ய முடியாத சாதனையை மீனா சாதித்து இருக்கிறார். இவருடைய மகள் தான் நைனிகா. இவரும் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement