குட்டி சாக்கு, குட்டி கார்த்தி, குட்டி பிரியாமணி – பருத்தி வீரன் படத்தில் நடித்த சிறுவர்களா இது?

0
462
- Advertisement -

வீரன் படத்தில் குட்டி முத்தகாக நடித்த சிறுமியின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பருத்திவீரன் படம் வெளிவந்து பதினஞ்சு வருஷத்து மேல ஆச்சு.இந்த படத்துல நடிச்ச பல பேரோட வாழ்க்கை இன்னைக்கு மிகப்பெரிய உயரத்த தொட்டிருக்கு. கார்த்திகா பருத்திவீரன் படத்துல நடிக்கும்போது நாலாவது படிச்சுட்டு இருந்த பொண்ணு.இன்னைக்கு கார்த்திகாவுக்கே ஒரு குழந்தை இருக்காங்க.

- Advertisement -

அப்பா இறந்த பிறகு , குடும்பம் ரொம்ப மோசமான நிலமைக்கு தள்ளப்பட ,சினிமாவுல மீண்டும் உதய தேடி போயிருக்காங்க,ஆனா யாரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கல். கார்த்துகாவையும் ம் அவரது அக்காவையும் சொந்த அத்தை மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க, கடைசி தம்பி அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். பெட்டிக்கடை மூலம் தனக்கான வருமானத்தில் வாழ்ந்து வருகிறார் கார்த்திகாவின் அம்மா.

அவரது கணவர் இருந்தபோது வாங்கிய ஃபைனான்ஸ் லோன் இன்னும் துரத்திக்கொண்டிருக்கிறது. “ஷூட்டிங் அப்போ எங்க வீட்டுல தான் டைரக்டர் நடிகர் ஹீரோயினின்னு பத்து நாள் தங்கி இருந்தாங்க.அப்ப நல்லா இருந்தோம் நல்லா கவனிச்சுக்கிட்டோம்,கஷ்டம்னு வந்தப்போ அவுங்கள பார்க்க கூட அந்த நேரத்துல அனுமதி கிடைக்கல..இவவளவு வருஷத்துக்கு பிறகு திரும்ப போயி உதவின்னு நிக்கிறது சங்கட்டமா இருக்கு தம்பி “என்கிறார் கார்த்திகாவின் அம்மா.

-விளம்பரம்-

இவர் மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த எத்தனையோ பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கார்த்தி மற்றும் சராவண்னுடன் பயணித்த குட்டி சாக்கு என்கிற விமலராஜ் மூட்டை தூக்கி பிழைத்து வருகிறார். இதுகுறித்து பேட்டியில் பேசிய அவர் ‘ பருத்திவீரன் படத்திற்கு பிறகு நான் மாடு, கோழிகளை வளர்ப்பதை சில வருடம் செய்து கொண்டிருந்தேன்.

பின் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது அறியாத வயதில் வாய்ப்பு தேடிவந்தது. இப்ப நடிக்கணும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், யாரை பார்க்க வேண்டும் யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. வாய்ப்பை தேடி அலைய நேரத்தில் வாழ்க்கையும் பார்க்க வேண்டும் என்பதால் தான் லோடுமேன் வேலைக்கு வந்துவிட்டேன். எனக்கு மாடுகள்,கோழிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும்.

இடையில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை சேவல் வளர்ப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே படத்தில் சிறு வயது கார்த்தியாக நடித்த சிறுவனின் புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement