சிறு வயதில் எனக்கு நீங்கள் அளித்த இந்த இரண்டு விஷயத்தை மறக்க மாட்டேன்- மனமுறுகிய ஏ ஆர்.

0
1028
a-r-rahman
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹமான். 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், இவர் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் தான். ஆனால், இவரை ஒரு இசை கலைஞராக அறிமுகம் செய்தது என்னவோ பிரபல இசைமைப்பாளர் ஆர் கே அர்ஜுனன் தான்.

-விளம்பரம்-
Music composer M.K. Arjunan no more - The Hindu

மலையாள மொழி சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம் கே அர்ஜுனன். மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் 1931 ஆம் ஆண்டு கொச்சி துறைமுகம் அருகே சிரட்டப்பாலம் என்ற ஊரில் பிறந்தார் எம் கே அர்ஜுனன் அவர்கள் முதலில் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்தார். பின் சினிமா படங்களுக்கு இசை அமைத்தார். மலையாள மொழி சினிமாவில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த கறுத்த பௌர்ணமி என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : ப்ளீஸ் போயிடு கொரோனா, கண்கலங்கி கை கூப்பி கெஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

- Advertisement -

இவர் பிரபல மலையாள பாடலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பியுடன் இணைந்து இசையமைத்த பல பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் படங்களில் பணியாற்றியுள்ளார். சுமார் 700க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் அவர்கள் ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார். இதுவே ஏ.ஆர்.ரகுமான் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்தது.

இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மூலம் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமா உலகில் இவ்வளவு சாதனைகள் செய்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவால் காலமானார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்… ”ஒரு முறை கனிவு காட்டினாலும், அது வாழ்நாள் வரை நிலைக்கும். எனது சிறுவயதில் எனக்கு நீங்கள் தந்த ஊக்கத்தையும், செலுத்திய அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். உங்களது முடிவில்லா மரபுக்கு உங்களின் எண்ணற்ற பாடல்கள் அத்தாட்சி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் எம்.கே.அர்ஜுனன் மாஸ்டர். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி பேட்ட படத்தில் நடித்துள்ளாரா ? வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

சினிமா உலகில் ஏ.ஆர்.ரகுமான் நுழையக் காரணமாக இருந்ததே எம் கே அர்ஜுனன் தான். அதனால் எப்போதுமே எம் கே அர்ஜுனன் மீது ரகுமானுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. 2017 ஆம் ஆண்டு எம் கே அர்ஜுனன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விலும் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டிருந்தார். இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன், ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement