இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றி பலாத்காரம் செய்த நடிகர் விஜயின் அலுவலக உதவியாளர் கைது செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு 26 வயது தான் ஆகிறது. இவர் கடந்த நவம்பர் மாதம் அண்ணாநகர் மகளிர் காவல் ஆணைய நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருக்கிறார்.
அந்த புகாரியில் அவர், சோசியல் மீடியாவில் நடிகர் விஜயின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறேன் என்று கூறி விஜய் உடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் ராஜேஷ் என்பவர் பதிவிட்டு இருந்தார். இவர் கிண்டியை சேர்ந்தவர். என்னுடைய தோழி மூலம் தான் இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. நான் நண்பராக தான் அவரிடம் பழகினேன். திடீரென்று அவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் ராஜேஷ் எனக்கு உறுதி அளித்திருந்தார்.
இளம்பெண் கொடுத்த புகார்:
இதனால் நானும் அவரை நம்பி காதலிக்க தொடங்கினேன். அது மட்டும் இல்லாமல் என்னை அவர் பலமுறை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரமும் செய்து இருக்கிறார். பின் என்னிடம் பல காரணங்களை எல்லாம் சொல்லி இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி இருக்கிறார். அதோடு அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிற விஷயம் எனக்கு சமீபத்தில் தான் தெரிய வந்தது. இதனால் நான் அவரிடம் நியாயம் கேட்க சென்றதற்கு என்னை மிரட்டி வெளியே அனுப்பி விட்டார். பின் அவர், இப்படி இருப்பது போல் எப்போதுமே என்னிடம் இருக்கலாம்.
விஜய்யின் அலுவலக உதவியாளர் திடீர் கைது; காரணம் என்ன? #NewsTamil24x7 | #thalapthyvijay | #officeassistant | #chennai pic.twitter.com/9d5XHRkwr4
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 31, 2023
ராஜேஷ் செய்த வேலை:
திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது. இதையும் மீறி தொல்லை செய்தால் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று என்னை மிரட்டுகிறார். இதனால் ராஜேஷ் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை அடுத்து போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறது.
போலீஸ் விசாரணை:
அதில் அவர் அந்த இளம் பெண்ணை ஏமாற்றியது தெள்ளத் தெளிவாக உறுதியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவரிடம் லட்சக்கணக்காக பணத்தை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் வாங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு விஜய் பெயரை பயன்படுத்தி இவர் மோசடி செய்தது தெரிய வந்து இருக்கிறது. இதனை அடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி இருக்கின்றார். பின் நேற்று இரவு இவர் கடற்கரையில் பதுங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
கைதான ராஜேஷ்:
இதனை அடுத்து போலீசார் அதிரடியாக அதிகாலையில் ராஜேஷ் கைது செய்து இருக்கிறார்கள். அதன் பின் ராஜேஷ் மீது வன்கொடுமை, மோசடி போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவது உறுதியாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் பெயரை சொல்லி இன்னும் எத்தனை பெண்கள் எல்லாம் ராஜேஷ் ஏமாற்றி இருக்கிறார்? என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.