புனீத்தை தொடர்ந்து ஜெயிலர் நடிகர் சிவராஜ் குடும்பத்தில் மேலும் ஒரு இழப்பு – சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட சோகம்.

0
2076
Vijayragavender
- Advertisement -

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பால் இறந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட திரை உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜ்குமார். இவருடைய பேர் தான் விஜய் ராகவேந்திரா. இவர் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். தற்போது இவர் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும் இவர் நடிகர் மட்டும் இல்லாமல், பாடகர் ஆகவும் இருக்கிறார். இவர் ரோமியோ ஜூலியட், விக்ரம், குஷி, விஜய் சிம்ஹா, ரிஷி, மால்குடி டேஸ் போன்ற பல கன்னட படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தேங்க்ஸ் சாம்பியன் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்திருக்கிறார். இவர் இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். தற்போது இவர் பிஸியான நடிகராகவும் நடித்து கொண்டிருக்கிறார். இதனிடையே நடிகர் விஜய் ராகவேந்திரா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ஸ்பந்தனா குறித்த தகவல்:

மேலும், ஸ்பந்தனா அவர்களுக்கு தற்போது 41 வயது. இவர்களுக்கு சவுரியா என்ற 10 வயதில் மகன் இருக்கிறார். இவர்கள் பெங்களூர் ஜக்கூரில் வசித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் 2017 ஆம் ஆண்டு வெளியான அபூர்வா என்ற கன்னட திரைப்படத்தில் ஸ்பந்தனா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் ராகவேந்திரா ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் பேங்க் ஆக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

ஸ்பந்தனாவிற்கு ஏற்பட்ட மாரடைப்பு:

அதன் பின்பு சில தினங்களுக்கு முன்பு விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா அவர்கள் திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ராகவேந்திரா அவருடைய தோழிகள் எல்லோரும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அப்போது இவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. மேலும் தாய்லாந்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தின் மூலம் ஸ்பந்தனாவை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்:

இவருடைய மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உட்பட பல கட்சித் தலைவர்கள், கன்னட தலைவர், திரையுலக பிரபலங்கள் என பலருமே தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.அதோடு விஜய் ராகவேந்திரா மற்றும் ஸ்பந்தனா தம்பதிகள் தங்களுடைய 16 வது திருமண நாளை இன்னும் சில நாட்களில் கொண்டாட இருக்கும் நிலையில், இவருக்கு இப்படி நேர்ந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனைவருக்கும் ஏற்பட்ட பேரதிர்ச்சி:

இதன்பின் கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் 39 வயதிலேயே இருந்திருந்தார். சமீபத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ளார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. இவர்களை அடுத்து தற்போது மாரடைப்பு காரணமாக ஸ்பந்தனா உயிரிழந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கன்னட திரை உலகிற்கு இது ஒரு சாபமாகவே மாறிவிட்டது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement