ஜெய் பீம் படத்திற்கு சில மாதங்கள் முன்பே திருமணத்தை முடித்துள்ள நடிகை – அட, அவரின் கணவர் இவர் தானா.

0
553
lijomol
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக லிஜோ மோல் திகழ்கிறார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு பிரபலமானார். ஆனால், இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் தமிழில் நடித்த ஜெய் பீம் படம் வேற லெவல். கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது.

-விளம்பரம்-

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது.

- Advertisement -

மேலும், இந்தப்படம் வெளிவந்து மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் செங்கோணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். ஜெய் பீம் படத்திற்கு பின்னர் இவருக்கு பல விருதுகளும் குவிந்தது. ஆனால், இவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது வருத்தமே. ஜெய் பீம் படம் வெளியாகும் சில மாதங்கள் முன்பு தான் நடிகை லிஜோமோல் ஜோஸ் அவர்கள் கேரளாவை சேர்ந்த அருண் அண்டனி என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் லிஜோமோல் இடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்தது, கேரளாவில் உள்ள இடுக்கியில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். அப்பா ஜோஸ், அம்மா லிஜோம்மாஇவங்க ரெண்டு பேரோட பெயரின் முதல் எழுத்துக்களை சேர்த்து லிஜோ ஆனது. அது ஆண்களுக்கான பெயர் மாதிரி இருந்தது என்பதால் லிஜோமோல் ஆனது. இதுதான் என்னுடைய பெயருக்கு காரணம். கொச்சியில் விசுவல் கம்யூனிகேஷன் முடித்தேன். முடித்ததும் ஒரு சேனலில் இரண்டு வருடம் வேலை செய்தேன். அதற்கு பிறகு முதுகலைப் பட்டம் பெற்றேன்.

-விளம்பரம்-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் படித்தேன். அங்கே படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். பின் மலையாள திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரனோட மனைவி உன்னிமாயா மூலம் தான் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அவர்களால்தான் அந்த படத்தில் நடித்தேன். அதற்கு பிறகும் நடிப்பு மீது ஆசை இல்லை. எனக்கு டான்ஸ் ஆட வராது. நடிக்க வந்த பிறகும்கூட டான்ஸ் கிளாஸ் போனதில்லை.

டான்ஸ் ஆடுற மாதிரி கதை வந்தால் கூட அதை மறுத்து விடுவேன். தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த பிறகு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஒரே மாதிரி படங்கள் பண்ணுவதில் விருப்பமில்லை. அதற்கு பிறகு தான் ஜெய் பீம் படத்தின் செங்கேணி போல் கிராமத்து கதாபாத்திரங்கள் நிறைய வந்தது. ஜெய்பீம் படத்தில் நடித்த பிறகு தான் நடிப்பு மீது எனக்கு ஆர்வம் வந்தது. அந்த படத்தில் இருந்து தான் நடிப்புக்காக ஒர்க் பண்ண ஆரம்பித்தேன்.செங்கேணி மாதிரி மறுபடியும் ஒரு கதாபாத்திரம் என்னால பண்ண முடியாது என்று பல விஷயங்களை லிஜோ கூறியிருக்கிறார்.

Advertisement