இந்த நடிகர் வேண்டும் என்று அட்லீயிடன் சிபாரிசு செய்த விஜய்.! யார் தெரியுமா.!

0
1362
Vijay-63
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். இந்த படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விவேக் காமெடி கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும், யோகி பாபுவும் இருக்கிறார்.

இதையும் படியுங்க : யோகி பாபு கட்டிய புதிய வீடு.! எப்படி கட்டியுள்ளார்னு பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

- Advertisement -

யோகி பாபு விஜய்யுடன் ஏற்கனவே வேலாயுதம், மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து தனியார் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பெரியளித்துள்ளார்.

அதில், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று அட்லி முன்பே சொல்லிவிட்டார். அது மட்டுமில்லாமல் விஜய் சாரும் அட்லீயிடம் ஒரு வார்த்தை சொன்னார். அதன்படியே இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்து. இந்த வருடம் எனக்கு இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் யோகி பாபு.

-விளம்பரம்-
Advertisement