ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் – மேல் முறையீட்டுக்கு சென்ற விஜய்க்கு நீதி மன்றம் அளித்த தீர்ப்பு.

0
4149
vijay
- Advertisement -

சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தவில்லை நடிகர் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு.

-விளம்பரம்-

நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று கடுமையாக கூறி இருந்தனர்.இதுமட்டுமல்லாம் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருந்தார். இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் கூறுகையில், வரி கட்டக் கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது. அது விஜய் சாருக்கும் நன்றாகத் தெரியும்.ஆனால், இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அபராதமும் விதித்திருக்கிறார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறோம். என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 19) நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement