போலி டாக்டர் பட்டங்கள் ‘அவார்ட் பாவங்கள்’ தலைப்பில் வீடியோ வெளியிட்டு பங்கம் செய்த கோபி சுதாகர்.

0
651
Gopi
- Advertisement -

சமீபத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் வடிவேலு, தேவா, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் போன்றவர்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் “சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமை கவுன்சில்” என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனரான ஹரீஷ் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை கடந்த 5ஆம் தேதி ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீஸ் படை கைது செய்தது. இவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியில் வந்திருக்கிறது.

-விளம்பரம்-

ஹரீஷ் பற்றிய தகவல் :

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை சேந்தவர் தான் ஹரீஷ். இவர் பள்ளி படிக்கும் போதே தொண்டு நிறுவனங்கள், சாரணர் இயக்கம் போன்றவற்றில் இருந்திருக்கிறார். அதனை தொடர்ந்து தன்னுடைய கல்லூரி காலத்தில் சென்னைக்கு படிக்க வந்த இவருக்கு ஊடகத்துறையில் சிலரை தெரிந்திருக்கிறது. அதற்கு பிறகு அவர்கள் மூலம் சமூகம் சார்ந்து இருக்க கூட சினிமா பிரபலங்கள் சிலருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஹரீஷ் தீட்டிய திட்டம் :

இந்த நிலையில் தான் ஹரீஷுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் கௌரவ டாக்டர் பட்டம் எந்த அளவிற்கு சமுதாயத்தில் விரும்பப்படுகிறது, அவற்றை வாங்க துடிக்கும் நபர்கள் பற்றி சில தொண்டு நிறுவனங்கள் மூலம் தெரிந்து வைத்திருக்கிறார். அதற்கு பிறகு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தை சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமை கவுன்சில் என்றும், இந்த நிறுவன நிதி கௌராவா டாக்டர் பட்டம் வழங்குவது மூலம் திரட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார் ஹரீஷ்.

10 ஆயிரம் ரூபாய்க்கு பட்டம் :

இதனை தொடர்ந்து தான் கோயம்பேட்டில் தனியார் விடுதியில் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தியிருக்கிறார் ஹரிஷ், பின்னர் அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தொடந்து சில பட்டமளிப்பு விழாக்களை நடத்தியிருக்கிறார் ஹரிஷ். இதனையடுத்து ஹரிஷ் மற்றும் இவருடன் இணைந்து கண்ணன் மற்றும் ராஜா பணத்திற்கு பட்டம் என்ற அடிப்படையில் ஆள் சேர்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு கொடுக்கும் படத்திற்கு தகுந்தபடி 10 ருபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரையில் 100 பேருக்கு மேல் போலி டாக்டர் பட்டம் வழங்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் தான் சமீபத்தில் இவர்கள் நடத்திய போலி டாக்டர் பட்டமளிப்பு விழாவை அண்ணா பல்கலை கழகத்தில் நடத்தினர். இந்த விழாவில் ஓய்வு பெட்ரா நீதிபதி வள்ளி நாயகம், தேவா, வடிவேலு, பரிதாபங்கள் சுதாகர், கோபி, இன்னும் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்று தெரியவந்த நிலையில் இந்த சர்ச்சை பெரிதாக வெடித்து.

அவார்ட் பரிதாபங்கள் :

இந்த நிலையில் தான் தாங்கள் கொடுத்து போலியான பட்டம் கிடையாது என்று சில ஆதரங்களை காட்டி வீடியோ ஒன்றை வெளியிலிரு இருந்தார். இந்நிலையில் அந்த விடியோவின் IP முகவரியை வைத்து போலீசார் ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜாவை வேலூர் அருகே உள்ள ஆம்பூரில் வைத்து கைது செய்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவத்தை கலாய்க்கும் வகையில் கோபி சுதாகர் தங்கள் யூதுயூப் பக்கத்தில் அவார்ட் பரிதாபங்கள் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர்கள்.

Advertisement