உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம்தானா ? – நெல்சன் மீது அப்செட் ஆகியுள்ள விஜய்.

0
1825
- Advertisement -

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் விஜய் தன்னிடம் சொன்ன விஷயம் குறித்து நெல்சன் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்று படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இப்படி அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சன், விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. அதிலும் இந்த படம் Ottயில் வெளியான பின்னர் இந்த படத்தை சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்து வந்தனர். இதனால் நெல்சனும் கேலிக்கு உள்ளானர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் நெல்சனுக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியானத்தில் இருந்தே பீஸ்ட் பட தோல்வியை சுட்டிகாட்டி நெல்சனை பலரும் கேலி செய்தனர். அதற்கும் மேலாக ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். மேலும், நெல்சனும் பீஸ்ட் பட விமர்சனத்தால் தனக்கு ஜெயிலர் பட வாய்ப்பே பறி போகும் நிலை ஏற்பட்டதாக கூறி இருந்தார்.

ஆனால், இந்த படம் வினியிகிஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்ததாக தயாரிப்பாளர் கூறியதால் தான் ஜெயிலர் படத்தை தொடர்ந்ததாக ரஜினி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருப்பதால் நிம்மதி மூச்சைவிட்டார் நெல்சன். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள நெல்சன் ‘ விஜய் சொன்ன நெகிழ்ச்சியான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் பேசியுள்ள அவர் ‘பீஸ்ட் படம் வெளியான பின்னர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் விஜய் சாரிடம் உங்களுக்கு என் மீது ஏதாவது கோபமா சார் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘படம் எடுத்தோம் அது சிலருக்கு பிடித்திருக்கிறது சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால், நேர்மையாக உழைப்பை செலுத்தி இருக்கிறோம். என்னிடம் சொன்னதைத்தான் நீ படமாக பிடித்திருக்கிறாய் அவ்வளவுதான். அடுத்தமுறை வேறு மாதிரி படம் எடுப்போம்.

நான் எதுக்கு உன் மீது கோபமடைய போகிறேன் ? உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம்தானா ? நீ இப்படி என்னிடம் கேட்டது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த படம் இல்லை என்றால் இன்னொரு படம் எடுக்கப் போகிறோம், அவ்வளவுதான் என்று கூறியதாக நெல்சன் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதேபோல ஜெயிலர் திரைப்படம் வெளியானதும் முதலில் தன்னை பாராட்டியது விஜய் தான் என்றும் கூறியிருக்கிறார் நெல்சன்.

Advertisement