நாங்குநேரியில் பதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் – எவ்வளவு தெரியுமா?

0
1133
- Advertisement -

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அனைவரின்  மனதையும்  உலுக்கியது. அச்சம்பவம் என்னவென்றால் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனும் அவருடைய தங்கை தங்கையின் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரையும்  அதிர்ச்சுக்குள் ஆக்கியது.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முனியாண்டி அம்பிகாபதி தம்பதியின்னாரின் மகன் 12 ஆம் வகுப்பு மகள் ஒன்பதாம் வகுப்பு அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் மாணவர் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

-விளம்பரம்-

ஒரு வாரம் கழித்து பள்ளி நிர்வாகம் அவருடைய பெற்றோரை தொடர்பு கொண்டு அவரைப் பள்ளிக்கு அழைக்குமாறு தொடர்பு கொண்டு உள்ளனர்.  இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த நிலையில்,  இதே பள்ளியை சேர்ந்த சக மாணவர்கள் தன்னை தாக்கியதாக  தலைமை ஆசிரியர்யிடம் கூறியுள்ளார்.  இதனை அறிந்த சகமானவர்கள். என் தங்களைக் குறித்து ஆசிரியர்களும் சொன்னாய் என்று அந்த மாணவரிடம் பள்ளி முடிந்த பின் சென்று மிரட்டி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி 10 மணி அளவில் வீட்டிலிருந்த மாணவரை வீட்டிற்குள் வந்த  மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனை தடுக்க சென்ற அவர் அவருடைய தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டுவீழ்ந்தது.

- Advertisement -

விசாரணை நடத்திய போலிஸ்:

இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர் இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி  அரசு மருத்துவமனையில் சேர்த்தது இச்சம்பவத்தின் அதிர்ச்சியால்  தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பு உயிரிழந்தார். விசாரணை நடத்திய போலீசார் இது சாதாரணமான  மாணவர்களின் பிரச்சினையாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கருத்தினர். அதன் பிறகு தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் மற்ற  மாணவர்களுக்கும் ஜாதியை ரீதியிலான சண்டை உள்ளது  என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் மற்றும் சக மாணவர்களின் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது. டி.எஸ்பி ராஜசேகர நடத்திய நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

முதல்வர் அறிவிப்பு:

இது குறித்து முதல்வரின் அறிவிப்பில் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயிடம் முதற்கட்டமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து மாணவர் சின்னதுரையின் தாயாரிடம் வீடியோ கால் மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனகளை தெரிவித்து வருகிறன்றனர். இந்த வழக்கின் மேலும் 1 சிறுவனை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த 7 பேர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.    

Advertisement