விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த சீரியல்- எப்படி இருக்காங்க பாருங்களேன்.

0
1359
vijaysethupathi

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.பின்பு சன் தொலைக்காட்சியில் 2006 ஆண்டு ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் விஜய் சேதுபதி அவர்கள் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடித்த பெண் சீரியலில் அட்டகத்தி தினேஷும் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத தகவல். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் அட்டகத்தி தினேஸும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதிலிருந்தே இவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று தான் அழைக்கிறார்கள். இவர் அதனைத் தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கபாலி, ஒரு நாள் கூத்து, அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் தினேஷ் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஈ என்ற திரைப்படத்தில் மூலம் தான் துணை நடிகராக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஆடுகளம் என்ற படத்தில் நடித்து இருந்தார். பிறகு மௌனகுரு என்ற படத்திலும் துணை நடிகராக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

-விளம்பரம்-

Advertisement