எட்டி உதைத்தால் 1 லட்சமா ? நானும் வன்னியர் தான். ஆனால் – வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.

0
927
jai Bhim
- Advertisement -

நானும் வன்னியர் தான் ஆனால், நான் சூர்யாவிற்கு தான் ஆதரவு அளிப்பேன் என்று நடிகர் அருண்குமார் ராஜன் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெய் பீம் இருக்கிறது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து வன்னியர் சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர்.

-விளம்பரம்-

வன்னியர் இனத்தை இழிவுபடுத்துவதற்காகவே படத்தில் காட்சி வைத்துள்ளார்கள் என்று பல இடங்களில் பல அமைப்புகள் போராட்டம் செய்வது மட்டும் இல்லாமல் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் சில அரசியல் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் #westandwithsurya என்று பலபேர் சூர்யாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகர் அருண் அவர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, உண்மையிலேயே ஜெய் பீம் படம் கொடுத்ததற்கு சூர்யா சாருக்கு நான் ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது வரையுமே இவர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா? என்பது எனக்கு தெரியவே தெரியாது. ஜெய்பீம் படத்திற்கு பின்பு தான் இவர்களுடைய சூழ்நிலையை உணர்ந்தேன். இந்த உலகில் உள்ள எல்லோரும் சமமானவர்கள். இருளர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதை ஜெய்பீம் படத்தில் சூர்யா சார் அழகாக சொல்லி இருந்தார். ஆனால், படத்தின் கதையை உணராமல் சில இடத்தில் வந்த காட்சிகளை வைத்து வன்னியர் சமூகத்தினர் போராட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று. இதுவரை நான் எந்த இடத்திலுமே பதிவு பண்ணியதில்லை. இந்த இடத்தில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அது என்னவென்றால், நானும் ஒரு வன்னியர் தான். ஆனால், வன்னியர் ஆக இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு எந்த ஒரு தவறும் தெரியவில்லை. நான் சூர்யா சாருக்கு சல்யூட் அடிக்கிறேன். இந்த படத்தில் அவர் எந்த ஒரு சமூகத்தினரையும் இழிவுபடுத்துவம் நோக்கில் நடிக்கவில்லை. ஆனால், ஒரு சில பேர் படத்தின் கருத்தையும் ஆழத்தையும் புரியாமல் தேவையில்லாமல் ஜாதிக் கலவரமாக மாற்றுகிறார்கள். அதிலும் சில பேர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் என்றெல்லாம் பேசுவது தவறான ஒன்று. எல்லோரும் சக மனிதர்கள். அவர்களுக்குரிய பிரச்சினையை பார்க்க வேண்டும் அதை ஜாதி மதம் பிரச்சனையாக மாற்றக் கூடாது. நான் வன்னியராக சூர்யா சாருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பதிவிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement