விஜய் சேதுபதியின் 50வது படம் – எப்படி இருக்கிறது ‘மகாராஜா’ – முழு விமர்சனம் இதோ

0
153
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் விஜய் சேதுபதி, தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை, திருடி விட்டார்கள் என்று போலீசில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று அர்த்தம். உடனே போலீஸ் எந்த செல்வத்தை காணவில்லை என்று கேட்கிறார்கள். பின் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை குறித்து சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த போலீஸுக்குமே கோபம் வருகிறது. அதன் பின் விஜய் சேதுபதியை அடித்து விரட்டுகிறார்கள்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் தன்னுடைய லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தருகிறேன் என்று விஜய் சேதுபதி போலீஸ் இடம் சொல்கிறார். ஐந்து ரூபாய்க்கு கூட தேராத ஒரு பொருளை இவ்வளவு விலை கொடுத்து இவன் தேட காரணம் என்ற என்று எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது. பின் எல்லோருமே அந்த பொருளை தேட ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில் திருடு போன லட்சுமி என்ன? அந்த பொருளுக்கு விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் நகைச்சுவையாகவே செல்கிறது. இருந்தாலும், விறுவிறுப்பு இல்லை. ஆனால், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும், நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாகவும் காண்பித்திருக்கிறார்கள். அடுத்து என்ன என்று யோசிக்கும் அளவிற்கு இயக்குனர் கதைக்களத்தை நகர்த்து சென்றிருக்கிறார். வாழ்வில் தற்செயலாக நடக்கும் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் இயக்குனர் இந்த படத்தை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இயக்குனர் தான் சொல்ல நினைத்ததை சிறப்பாகவும் கச்சிதமாகவும் திரையில் காண்பித்து விட்டார். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதை அற்புதமாக காண்பித்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசை எல்லாம் நன்றாக இருக்கிறது. சமீபகாலமாகவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாத நிலையில் இந்த படம் கண்டிப்பாக கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது அவருடைய ‘ஐம்பதாவது படம்’ என்பதால் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

வில்லனாக அனுராக் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் அவருடைய டப்பிங் சரியில்லை. இவர்களை அடுத்து படத்தில் மம்தா, நட்டி, முனீஷ்காந்த், சிங்கம் புலி, அபிராமி ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகள் எல்லாம் அனல் பறக்க இருக்கிறது. இயக்குனர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பட குழுவுமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஒரு தரமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்

கதைக்களம், இயக்குனர் அதை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது

இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில இடங்களில் டப்பிங் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் மகாராஜா- நாற்காலியை பிடிப்பார்

Advertisement