வீட்டுக்கு கண்டிப்பா வரேன் டா. லோகேஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய் சேதுபதி. வீடியோ இதோ.

0
35409
lokeshpop

பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சமீப காலமாக காமெடி நடிகர்கள் பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற வண்ணம் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் லோகேஷ் என்பவரும் ஒருவர்காமெடிக்கு என இருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் இந்த காமெடி தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆதித்யா மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மத்தியில் பிரபலமானவர் லோகேஷ் பாப்.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த படம் நானும் ரவுடி தான் த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருந்தார். அந்த காமெடி சீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் லோகேஷ் பாப் ஒரு சில படங்களில் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக ஆதித்யா தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் காமெடி நடிகர் லோகேஷ் பாப் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், லோகேஷ்ஷின் சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்று அவரது நண்பர்கள் சிலர் சமூக வலைதளத்தில் உதவி கேட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருந்த மொக்கை ஆப் தி டே கோபி, சன் நெட்வொர்க் அவரது முழு செலவையும் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். மேலும் அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று நாங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பணத்தை திரட்ட உதவி கேட்டிருந்தோம். எங்களுக்கு தேவையான உதவி கிடைத்து விட்டது எனவே, அந்த பதிவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல் நலம் தேறி வந்துள்ள லோகேஷ் பாப்பை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை காரணமாக முன்பை விட உடல் எடை குறைத்து சோர்வுடன் காணப்டுகிறார் லோகேஷ். மேலும், நான் வீட்டிற்கு வந்ததும் என்னை வந்து பாருங்கள் அண்ணா என்று விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார் லோகேஷ்.

-விளம்பரம்-
Advertisement