விஜய்யை தொடர்ந்து பிரபல தமிழ் வாரிசு நடிகருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ள vjs – அவர் கேட்ட சம்பளம் தான் காரணமாம். எவ்ளோ தெரியுமா ?

0
567
vijaysethupathy
- Advertisement -

பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி இண்டர்நேஷனல் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி:

சமீப காலமாகவே விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு மிரட்டி வருகிறார். இவர் விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஸ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். முதல் பாகத்திலேயே படத்தில் நடிக்க விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. பின் இரண்டாம் பாகத்தில் நடிக்க படக்குழு அணுகியபோது கால்ஷீட் பிரச்சினை இருந்தது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள்:

இருந்தாலும் விஜய் சேதுபதி சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதோடு விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார். தற்போது இந்தி வெப்சீரிஸ் மற்றும் 4 இந்தி படங்களில் விஜய் சேதுபதியை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் புக் செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக படங்களில் விஜய் சேதுபதி பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி:

அதாவது சர்தார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தில் தான் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், விஜய் சேதுபதி பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. அதோடு இவர் ஒரு படத்தில் நடிக்க சுமார் 35 முதல் 45 கோடி வரை சம்பளம் கேட்பதால் ராஜூ முருகன் எடுக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துவரவில்லை என்று கூறப்படுகிறது. வேறு ஒரு நடிகரை வில்லனாக போட படக்குழு முடிவு செய்து இருக்கிறது.

Advertisement