10 வகுப்பு குரூப் போட்டோவில் விஜய் சேதுபதி எப்படி இருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

0
61729
Vijay-sethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ‘சுந்தரபாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடி தான், சேதுபதி, தர்மதுரை,விக்ரம் வேதா, கருப்பன்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து இவ்வளவு குறுகிய காலத்தில் மாபெரும் விஸ்வரூபம் அடைந்து உள்ளார். இதனாலேயே இவரை ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-
விஜய் சேதுபதி இதை எங்கு இருக்கிறார் சொல்லுங்க பாப்போம்…

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் “96”. இந்த படம் திரை அரங்கிற்கு வெளி வருவதற்கு முன்னால் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிக லைக், ஷேர் செய்தும் வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த “96” படம் மிகச் சிறந்த காதல் காவிய படமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், 1996 ஆம் ஆண்டு பள்ளி கூடத்தில் ஒன்றாக படித்து வந்த விஜய்சேதுபதியும், திரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றார்கள். பின் 22 வருடங்களுக்கு பிறகு ஒரு யூனியனில் மறுபடியும் சந்திக்கும் போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் இனம் புரியாத காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

இதையும் பாருங்க : தனது சொந்த பாலோவரிடமே பணத்தை பறிகொடுத்த பிரசாந்த். எவ்வளவு ரூபாய்னு பாருங்களேன்.

- Advertisement -

இந்தப்படம் மிகப்பெரிய அளவு ஹிட் கொடுத்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கி உள்ளார். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த படம் அமைந்தது. அதோடு இந்த படத்தை பார்க்கும் போது மீண்டும் பள்ளி பருவத்திற்கு கொண்டு போனது என ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள். அப்போது விஜய் சேதுபதி வெளியிட்ட பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தான் இவருடைய நடிப்பில் வந்த சங்கத்தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் சேதுபதி அவர்கள் தளபதி விஜய் நடிக்கும் “தளபதி 65” என்ற படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

Image result for vijay sethupathi childhood
இதை ஒப்பிட்டு கண்டுபிடிங்க

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்குகிறார். அதோடு அடுத்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் தூள் கிளப்ப போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement