தனது சொந்த பாலோவரிடமே பணத்தை பறிகொடுத்த பிரசாந்த். எவ்வளவு ரூபாய்னு பாருங்களேன்.

0
46977
- Advertisement -

ஒரு திரைப்படம் வெளியாகி ஒருவாரம் கழித்து தான் அந்த திரைப்படம் எப்படி உள்ளது சூப்பரா, சுமாரா என்ற விமர்சனத்தை நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவார்கள். இதனால் ரசிங்கர்கள் வார கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு திரைப்படம் வெளிவந்து ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை யூடுயூப் என்ற சோசியல் மீடியா மூலம் தெரிந்து கொண்டு விடுகின்றனர். மேலும், படங்களை விமர்சித்து அது குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இதை பல்வேறு நபர்கள் செய்து வருகிறார்கள். அதில் சில பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானர் என்று பார்த்தால் படங்களை விமர்ச்சிக்கும் “பிரசாந்த் ரங்கசாமி” தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

-விளம்பரம்-

பிரசாந்த் ரங்கசாமி என்பவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடூப் சேனலில் படங்கள் திரைக்கு வெளி வருவதற்கு முன்னரே யூடூப் குறித்த கருத்துக்களை சொல்வதில் பிரசாந்த் ரங்கசாமி வல்லவர். இதனால் பிரசாந்த் ரங்கசாமிக்கு யூடியூபில் ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைப்பர்ஸ் உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் இவர் அக்கவுண்டுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவர் சமூக வலைத்தளங்களில் நிறைய நன்மை பயக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

சினிமா மட்டுமில்லாமல் அரசியல், பொது பிரச்சனை என்று பலவற்றை குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதோடு அரசாங்கம் குறித்து கூட இவர் பல்வேறு பதிவுகளை செய்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அனாதை குழந்தைகள் மற்றும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிறைய பண உதவிகளை செய்து உள்ளார். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் பிரபலமான நபர். தற்போது அவர் மன வருத்தத்துடன் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அது என்னவென்றால், ‘ ‘அம்மாவுடன் திருப்பதியில் இருக்கிறேன். எனக்கு காசு பத்தவில்லை. ஆயிரம் ரூபாய் தாருங்கள் திருப்பி தந்து விடுகிறேன் என்று பாலோவர் ஒருவர் கேட்டார்.

நானும் அதை நம்பி கேட்ட பணத்தை தந்தேன். பணத்தை அந்த நபர் வாங்கி மூன்று மாதங்கள் ஆகிறது. பணத்தை வாங்கியதற்கு பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. நான் நம்பிக்கையின் அடிப்படையில் தான் பணத்தை தந்தேன். அந்த நபருக்கு கால் செய்தல் போன் அட்டென்ட் பண்ண மாட்டுங்கிறாரு. ஏன்டா இப்படி கேவலமாக இருக்கீங்க?? எப்படி உங்களால மத்தவங்க பணத்தை ஏமாத்த தோணுது’ இனி எப்படி இன்னொருத்தன் கேட்டா உதவறது ? என்று சமூக வலைதளங்களில் அந்த நபரை திட்டி உள்ளார். பிரசாந்த் பதிவை பார்த்து பல பேர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த பணத்தை வாங்கி ஏமாற்றிய நபரை தாறுமாறாக வறுத்து எடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement