நடிகர் சூரியன் அம்மன் உணவகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய் சேதுபதி. வைரலாகும் வீடியோ.

0
12919
Vijay-sethupathi
- Advertisement -

காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார் நடிகர் சூரி. காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 3-1-1024x666.jpg

ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை.சினிமாவை போலவே நிஜ வாழ்விலும் மிகவும் நகைச்சுவை நிறைந்த ஒரு நபராக இருந்து வருகிறார் சூரி. நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார்.

இதையும் பாருங்க : மோடியை சந்திக்க சென்ற எஸ் பி பிக்கு நேர்ந்த அவமானம்.

- Advertisement -

பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. தற்போது தமிழில் ஒரு முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் நடிகர் சூரி அம்மன் உணவகம் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சூரி-யின் நண்பருமான நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். இது நடிகர் சூரி-யின் ஆறாவது ஹோட்டல் கிளை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவகம் திறப்பு விழாவில் பேசிய சூரி, எங்களுடைய முதல் கிளையிலிருந்து அனைத்து கிளையையும் சிவகார்த்திகேயன் தான் திறந்துவைத்தார்.

எங்கள் உணவகத்திற்கு கிடைத்த மக்களின் ஆதரவை தொடர்ந்து வந்ததால் அடுத்தடுத்து கிளைகளை திறக்க முடிந்தது. மதுரையில் அனைத்தும் சைவ உணவாக இருக்கிறது, எனவே அடுத்து திறக்கும் உணவகத்தை அசைவ உணவகம் திறக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறி இருந்தார். அதனால் தற்போது இந்த உணவகத்தை அசைவ உணவாக ஆரம்பித்து உள்ளோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சூரியின் உணவகத்தை நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். சூரியின் உணவகத்தில் திடீரென்று விஜய் சேதுபதியை பார்த்த ரசிகர்கள் ஷாக்கடைந்தனர்.

-விளம்பரம்-

மேலும், விஜய் சேதுபதியுடன் அங்கிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்த போது அவர்களது செல் போனை வாங்கி விஜய் சேதுபதியே புகைப்படத்தை எடுத்தார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகவுள்ள சங்கத் தமிழன் படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement