தன்னுடைய குடும்ப அனுபவங்களை பற்றி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, சரவணன், ஆர்.கே சுரேஷ், அருள்தாஸ், ரோஷினி ஹரிப்பிரியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் இதுவரை 30 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய புரோமோஷன் நேரத்தில் தலைவன் தலைவி பட குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி:
அப்போது நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து விஜய் சேதுபதி, இதை நான் பொது மேடையில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரு முறை நான் என்னுடைய மனைவியின் கழுத்தை பிடித்து சுவற்றில் அப்படியே வைத்து விட்டேன். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னதான் இருந்தாலும் நான் அவள் மீது கை வைத்திருக்கக் கூடாது. கை வைத்த அந்த நிமிடத்தில் நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு விட்டேன். இருந்தாலும் சரி, தப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். மேலே கை வைத்தது ரொம்ப தப்பு என்று உணர்ந்தேன். அதற்காக நான் ரொம்பவே ஃபீல் பண்ணேன்.
https://www.youtube.com/watch?v=iw0Oh3o4x2M
மனைவி பற்றி சொன்னது:
கணவன் மனைவிக்கு இடையே சண்டை எதுக்கு வருது என்று தெரியாது. ஒரு சில சமயங்களில் எதனால சண்டை போட்டோம் என்று கூட புரியாது. நான் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னாடியே கல்யாணம் ஆகிவிட்டது. நான் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னுடைய மனைவிக்கு தெரிந்து விட்டது. அதை பார்த்துவிட்டு என்னுடைய மகனை கோபத்தில் வீட்டை கிளம்பி விட்டார். அப்புறம் நான் அவளிடம் போய் அந்த போட்டோவை எல்லாம் கிழித்து போட்டுவிட்டு இனிமேல் சினிமாவுக்கு முயற்சி செய்யமாட்டேன் என்று வயிற்றில் சத்தியம் எல்லாம் பண்ணிவிட்டு கூட்டிட்டு போயிட்டேன்.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:
அதற்குப் பிறகு வேற போட்டோ பிரிண்ட் போட்டு எல்லோருக்கும் கொடுத்து விட்டேன். அந்தப் பையன் தான் இப்போ ஹீரோ ஆகி விட்டான் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். மேலும், விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்தது.

விஜய் சேதுபதி குறித்த தகவல்:
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் ஒப்பந்தமாகி வெளியாகியிருந்தது. இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.






