கோடி கோடியாய் சம்பாத்தியம். ஆனாலும், சொகுசு காரை பைனான்சில் வாங்கியுள்ள Vjs – விலை எவ்ளோ தெரியுமா ?

0
917
vijaysethupathi
- Advertisement -

என்றென்றும் மக்கள் செல்வனாக தமிழக மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தாலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தமிழ் சினிமா உலகில் பிசியான கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். விஜய்சேதுபதி நடிகராக மட்டுமில்லாமல் தொகுப்பாளர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கி இருந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி போன்ற படங்களெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பல ஆண்டுகள் கழித்து சின்னத்திரை பக்கம் வந்த பாவனா – அப்போ இனிமே விஜய் டிவி கிடையாதா ?

- Advertisement -

இதனிடையே கடந்த மாதம் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்தி இருந்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த காருடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், MercedesBenz GClass என்ற மாடலின் இந்த காரின் விலை 1.60 கோடி முதல் 2.50 கோடி வரை இருக்கும். அதே போல இந்த காரை நடிகர் விஜய் சேதுபதி Hfdc பைனான்ஸ் மூலமாக எடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தன்னுடைய விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன் பெயரில் இந்த காரை வாங்கி இருக்கும் விஜய் சேதுபதி. காரின் முன் பக்கம் தன்னுடைய பெயரின் முதல் எழுத்தான ‘v’ என்ற லோகோவை போட்டு உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement