மூன்றரை வயதில் மறைந்த விஜய்யின் தங்கை – அவரின் நினைவிடத்தில் எழுதியுள்ள விஷயம். இதோ புகைப்படம்.

0
348
- Advertisement -

நடிகர் விஜய்யின் தங்கை வித்யாவின் நினைவிடம் தொடர்பான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் முதன் முதலாக வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு இவர் தன்னுடைய தந்தை இயக்கிய சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் விடாமுயற்சியுடன் விஜய் போராடி இருந்தார். அதற்குப்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மாஸ் காட்டி இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை தூணாக விஜய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விஷயம் தான்.

- Advertisement -

விஜய் தங்கை குறித்த தகவல்:

அதே போல அவருக்கு ஒரு தங்கை வித்யா இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சிறுவதிலேயே இருந்துவிட்டார். வித்யாவுக்கு மூன்றரை வயசு இருக்கும். அப்போ விஜய்க்கு 9 வயசு. வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் போனது. ஒருநாள் விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டாள். தன்னோட கண் எதிரே தன் தங்கை இறந்ததை விஜயால் தாங்க முடியாமல் அப்பான்னு கதறினான்.

விஜய் தங்கை நினைவு இடம்:

விஜய்க்கு அவரது தங்கையின் இழப்பு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே இருந்து வருகிறது. வித்யாவின் உடைய மரணத்திற்கு பிறகு சுட்டித்தனமாக விளையாடி இருந்த விஜய் அப்படியே மாறிவிட்டார். அவர் அமைதியாக இருப்பதற்கு காரணம் வித்யா உடைய மரணம் தான் என்று கூறப்படுகிறது என்று அவருடைய தாய் சோபா கூறியிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வித்யாவின் நினைவு தினம் வந்தது.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

இந்த நினைவு தினத்தில் வித்யாவின் நினைவு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு விருக்கிறார். அதை ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். கடைசியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மேனன், அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது.

விஜய் அரசியல்:

நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இந்த படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் அரசியலில் முழு தீவிரமாக இறங்க இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்திருந்தார்.

Advertisement