நீ டைரக்ட் பண்றதுக்கு உன் அப்பா இருக்கிறார் என்று சொன்னதும் இல்ல என் முதல் ஹீரோ அவர் தான் என்று சொன்னான் – SAC சொன்ன சூப்பர் வீடியோ.

0
158
Sac
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் பாருங்க : வெற்றிமாறன் கண்ணுல எதோ பிரச்சனைனு நெனைக்கிறேன் – ராஜராஜ சோழன் சர்ச்சையில் குஷ்பூ பதிலடி.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

-விளம்பரம்-

விஜய் மகன் சஞ்சய் :

குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் அடங்கிய படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் விஜய்யின் மகன் சினிமாவில் களம் இறங்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் விஜய் படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

SAC அளித்த பேட்டி :

அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற குறும்படம் ஒன்று வெளியாகி இருந்தார். மேலும், சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சி ‘தற்போது அவன் கனடாவில் படித்து முடித்துவிட்டு வந்து இருக்கிறான்.நான் அவனிடம் மிகவும் ஈசியாக சொன்னேன். உனக்கு என்னடா நீ டைரக்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கும் போது பெரிய சூப்பர் ஸ்டார் இருக்கிறார் என்று

என் முதல் ஹீரோ அவர் தான் :

மேலும், நீ ஈசியாக டைரக்டராக ஆகிவிடலாம் நிச்சயமாக அவரை வைத்து படம் எடுத்தால் படம் கண்டிப்பாக ஓடிவிடப் போகிறது என்று அதுதான் நிலைமை என்று சொன்னேன். அதற்கு அவன் ‘இல்ல தாத்தா எனக்கு விஜய் சேதுபதி தான் முதல் ஹீரோ என்று சொன்னான்.அவனுக்கு என்ன நம்பிக்கை என்றால் தானொரு டைரக்டர் ஆகி அதன் பின்னர் அப்பாவை வைத்து இயக்க வேண்டும் என்பதுதான். பாருங்க, அது என்னுடைய ரத்தம்’ என்று மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

Advertisement