மாஸ் இயக்குனரின் படத்தில் அறிமுகமாக இருக்கும் விஜய் மகன் சஞ்சய்.! அப்போ முதல் படமே ஹிட் தான்.!

0
738
Sanjay-and-vijay

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. தற்போது கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார். 

Shankar

இந்தியன் 2 படத்திற்கு பின்னர் ஷங்கர் யாரை வைத்து இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க : நடிகர் விஜய் மகன் சஞ்சய் பெயரில் நடந்த மோசடி..!வெளியான அதிர்ச்சி தகவல்..! 

- Advertisement -

அதுமட்டுமில்லை இந்த படத்தில் விக்ரமின் மகன்துருவும் நடிக்க இருப்பாதகவும் கூறப்படுகிறது. விக்ரம் மகன் துருவ் ஏற்கனவே ‘வர்மா ‘ படத்தின் மூலம் சினிமாவில் காலடி வைத்துவிட்டார்.

அதே போல விஜய் மகன் சஞ்சய் பல ஆண்டுகளுக்கு முன்னரே விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஒரு சிறிய காட்சியில் தோன்றியுள்ளார் என்பதும் இரண்டு குறும்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடக்கது.

-விளம்பரம்-
Advertisement